நாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஜெகநாதன் பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த குமரகுருபரன், சென்னை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தின் 10வது ஆட்சியராக நியமிக்கப்பட்ட ஜெகநாதன் (48) நேற்று(07-09-2012) பொறுப்பேற்றார். புதிய ஆட்சியர் ஜெக நாதன் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது : அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது அரசு அலுவலர்களின் கடமை. இதை நிறைவேற்ற அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒரு குழுவாக இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையும். […]

நாமக்கல் பகுதியில் 7ம் தேதி மின்தடை

நாமக்கல் பகுதியில் 7ம் தேதி மின்தடை

நாமக்கல் துணை மின் நிலையத்தில், வரும், 7ம் தேதி, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே, அன்று காலை, 9 மணி முதல் மாலை, 5.30 மணி வரை, நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முத்துக்காப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, கீரம்பூர் ஆகிய பகுதிகளில், மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது

நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் இடமாற்றம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் இடமாற்றம்

நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்த குமரகுருபரன், செய்தி விளம்பரத்துறை இயக்குனராக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று, ஓராண்டு மட்டுமே ஆன நிலையில், அவரது இடமாற்றம், அனைத்து தரப்பினர் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் முழுவதும், பூங்கா, போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்தவர், மாவட்ட கலெக்டர் குமரகுருபரன். நாமக்கல் மக்களின் குறைகளை அறிய சமூக வலைத்தலமான FACEBOOK ல் Namakkal Collector என்ற பெயரில் கணக்கை தொடங்கி […]

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு இலவச பயிற்சி துவக்கம்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு இலவச பயிற்சி துவக்கம்

  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது. நாமக்கல் கிளை நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் கலந்து கொள்ள மாணவ, மாணவியருக்கு இங்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி துவக்க விழா ஆட்சியர் குமரகுருபரன் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: இந்த மையத்தில் பயிற்சி பெற 179 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டு 60 பேர் […]

கல்வி உதவித்தொகை மோசடி மாவட்ட அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை பாய்கிறது

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரக்குறைவான தொழில் செய்பவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் ராமசந்திரனை நேற்று முன் தினம் தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளர் ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே கல்வி உதவித் தொகையை கையாடல் செய்த, காரைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி ஆசிரியர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். 3 தலைமை ஆசிரியர்களை போலீசார் தேடிவருகிறார்கள். இந்நிலையில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மாவட்ட அதிகாரி ராமசந்திரன் […]

ராசிபுரத்தில் ரூ54 லட்சத்தில் நூலக கட்டிட பணி துவக்கம்

ராசிபுரத்தில் ரூ54 லட்சத்தில் நூலக கட்டிட பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கிளை நூலக கட்டிடம் கட்டும் பணி ரூ54 லட்சத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. பணி துவக்க விழா மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் தலைமையில் நடந்தது. சட்டப்பேரவை துணைத்தலைவர் தனபால் கட்டுமான பணியை துவக்கி வைத்தார். அவர் பேசும்போது, இந்த நூலக கட்டிடம் 3196 சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது. தரை தளத்தில் முன்புற வராண்டா, நூலக அறை, நூல்கள் இருப்பறை, படிப்பறை, பதிவறை, சிறுவர்கள், பெண்கள் படிப்பறை மற்றும் முதியவர்கள் படிக்கும் அறை ஆகியவை […]

செங்கல் சூளைகளில் சாம்பலாகும் பனை மரங்கள்

செங்கல் சூளைகளில் சாம்பலாகும் பனை மரங்கள்

ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் பரவியதாக கருதப்படும் பனை மரங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இயற்கை நண்பன். தமிழ்நாட்டின் அடையாளமாக பனைமரங்கள் கருதப்படுகின்றன. இந்தியாவில் தற்போது 7 முதல் 8 கோடி பனைமரங்கள் இருப்பதாகவும் இதில் சுமார் 4 கோடி பனைமரங்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடைய இந்த பனைகள் சமவெளிகள், பள்ளத்தாக்குகள், மலைகளிலும் வளரும் தன்மை கொண்டவை. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன. பனை […]

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அழைப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையுடன் வரவேண்டும். 8ம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ, மாணவியர் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அட்டை பெற்றிருக்க வேண்டும். வேறு எந்த துறையிலும் உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் மாத […]

நாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்.

நாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்.

நாட்டின், 66வது சுதந்திர தினவிழா, நாமக்கல்லில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, பல்வேறு துறை சார்பில், 222 பேருக்கு, 33 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டுத் திடலில், நாட்டின், 66வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதை தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சென்று, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை, கலெக்டர் குமரகுருபரன் […]

1 2 3 16