காவிரியாற்றின் கரையில் பெண் சடலம் மீட்பு

காவிரியாற்றின் கரையில் பெண் சடலம் மீட்பு

பரமத்தி வேலூர் காவிரியாற்றின் கரையில் ஜனவரி 10-ம் தேதி மாலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இது குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கலா வேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் சிறப்பு எஸ்.ஐ. மாரிமுத்து சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். அவர் யார், எப்பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து வேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.