வேலூர் – குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்

வேலூர் – குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்

வேலூர் பேரூராட்சி: இன்று காலை மாவட்ட ஆட்சியர் திரு.தட்சணாமூர்த்தி அவர்கள் வேலூர் பேரூராட்சியில் இயங்கி வரும் “குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும்” பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். –

கார் மோதி மேஸ்திரி பரிதாப சாவு

சேந்தமங்கலம் அருகே வடுகப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (34). இவரது நண்பர் ராஜா(26).  கட்டிட மேஸ்திரிகள். நேற்று முன்தினம் இருவரும், சேந்தமங்கலத்தில் இருந்து பைக்கில் கரூர் சென்றனர். பின்னர் கரூரில் இருந்து சேந்தமங்கலத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பரமத்தி பைபாஸ் பிரிவு ரோடு அருகே வந்த போது அவ்வழியாக வந்த கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராஜா பலத்த காயம் அடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

பைக் மோதி தொழிலாளி பலி

பரமத்திவேலூர் ஊஞ்சப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு (55). அதே பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (50). இருவரும் கூலித் தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் பைக்கில் பரமத்தி வேலூருக்கு சென்றனர். பின்னர் மீண்டும் ஊஞ்சப்பாளையத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காமாட்சி நகர் பகுதியில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த துரைசாமி மற்றொரு பைக்கில் வந்த அருணாகிரி […]

காவிரியாற்றின் கரையில் பெண் சடலம் மீட்பு

காவிரியாற்றின் கரையில் பெண் சடலம் மீட்பு

பரமத்தி வேலூர் காவிரியாற்றின் கரையில் ஜனவரி 10-ம் தேதி மாலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இது குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கலா வேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் சிறப்பு எஸ்.ஐ. மாரிமுத்து சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். அவர் யார், எப்பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து வேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அகில இந்திய கபடி போட்டி – பெரியார் பல்கலை அணி வெற்றி

அகில இந்திய கபடி போட்டி – பெரியார் பல்கலை அணி வெற்றி

அகில இந்திய அளவிலான பல்கலை கபடி போட்டியில், சேலம் பெரியார் பல்கலை அணி வெற்றி பெற்றது.ப.வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில், கபடி போட்டி நேற்று துவங்கியது.இன்று (டிச – 29) வரை நடக்கும் இப்போட்டியில், நான்கு பிரிவுகளில் 16 அணிகள் பங்கேற்கிறது. மும்பை பல்கலை அணியும், மகாத்மாகாந்தி காசி வித்யா வாரனாசி பல்கலை அணியும் மோதுவதாக இருந்தது. ஆனால், மகாத்மாகாந்தி காசி வித்யா வாரனாசி அணி வராததால், மும்பை பல்கலை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அண்ணாமலை […]

சரக்கு ஆட்டோ கவிழ்ந்து – 13 பேர் படுகாயம்

ப.வேலூர்  அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு  பங்கேற்க சென்ற பக்தர்கள், 13 பேர் படுகாயமடைந்தனர்.பரமத்தி அடுத்த வள்ளியம்பட்டிபுதூரில் உள்ள மதுரைவீரன், வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.ப.வேலூர் அடுத்த ஜேடர்பாளையம், மரவாபாளையம், கீழ்சாத்தம்பூர், கரூர் மாவட்டம் மண்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என, 25 பேர் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு […]