ராசிபுரத்தில் ரூ54 லட்சத்தில் நூலக கட்டிட பணி துவக்கம்

ராசிபுரத்தில் ரூ54 லட்சத்தில் நூலக கட்டிட பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கிளை நூலக கட்டிடம் கட்டும் பணி ரூ54 லட்சத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. பணி துவக்க விழா மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் தலைமையில் நடந்தது. சட்டப்பேரவை துணைத்தலைவர் தனபால் கட்டுமான பணியை துவக்கி வைத்தார். அவர் பேசும்போது, இந்த நூலக கட்டிடம் 3196 சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது. தரை தளத்தில் முன்புற வராண்டா, நூலக அறை, நூல்கள் இருப்பறை, படிப்பறை, பதிவறை, சிறுவர்கள், பெண்கள் படிப்பறை மற்றும் முதியவர்கள் படிக்கும் அறை ஆகியவை […]

இந்தியன் வங்கியின் கடன் வசூல் முகாம்

இந்தியன் வங்கியின் கடன் வசூல் முகாம்

இந்தியன் வங்கியின் ராசிபுரம் கிளை சார்பில், லோக் அதாலத் மூலம் கடன் வசூல் முகாம் நடந்தது. ராசிபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடந்த முகாமில் வங்கியின் சேலம் மண்டல மேலாளர் செழியன், சார்புநீதிமன்ற நீதிபதி சாய்சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வேணுகோபால், வங்கியின் சேலம் மண்டல உதவி பொதுமேலாளர் தங்கவேல் ஆகியோர் முகாமை நடத்தினர். இதில் ராசிபுரம், வடுகம், அத்தனூர், தொ.ஜேடர்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். முகாமில், 60 […]

ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனில் வாகனம் நிறுத்துமிடம்

ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனில் வாகனம் நிறுத்துமிடம்

ராசிபுரம் புதிய ரயில்வே ஸ்டேஷனில் குளிரூட்டப்பட்ட குடிநீர் இயந்திரம், வாகனம் நிறுத்துமிடம் அமைக்க, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எம்.பி. ராமலிங்கம் அறிவித்துள்ளார். ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்கவும், குளிரூட்டப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கவும், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷன் வழித்தடத்தில், ஈரோடு வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பத்துக்கும் மேற்பட்ட […]

தேசிய கிரிக்கெட் போட்டிக்கு ராசிபுரம் அரசு பள்ளி மாணவர் தேர்வு

தேசிய கிரிக்கெட் போட்டிக்கு ராசிபுரம் அரசு பள்ளி மாணவர் தேர்வு

ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கும் தேசிய கிரிக்கெட் போட்டிக்கு, தமிழக அணியில் விளையாட, ஆர்.புதுப்பாளையம் அரசு பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய அளவில், மாநிலங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் ராஜஸ்தான் மாநிலத்தில், ஜன-18 துவங்கியது. இப்போட்டியில், தமிழக அணி சார்பில் போட்டியிட ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் யுவன் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் +1 படிக்கும் இம்மாணவர், 17 வயதிற்குட்டோர் பிரிவில் விளையாட, தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தால் தேர்வு செய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநிலம் […]

சாலை பாதுகாப்பு வார விழா – மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

ராசிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து போலீஸார் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் தாமரைசெல்வன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரதீபா, செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., ராஜா, பள்ளி மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு பேரணியை கொடியைசைத்து துவக்கி வைத்தார். பழைய பேருந்து நிலையத்தில் துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது  

வீடியோ கான்பரன்ஸ் மூலம் இராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர்அலுவலகம் திறப்பு

வீடியோ கான்பரன்ஸ் மூலம் இராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர்அலுவலகம் திறப்பு

ராசிபுரம் மோட்டார் வாகன அலுவலகத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார். ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், கொழிஞ்சிப்பட்டியில் வாடகை கட்டித்தில் இயங்கி வந்தது. அதற்கான சொந்த கட்டிடம், ராசிபுரம்- சேலம் ரோட்டில், 52 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் புதியக் கட்டிடத்தை திறந்து வைத்தார். […]

மின்நிறுத்த அறிவிப்பு

ராசிபுரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் மௌலீஸ்வரன் வெளியிட்ட அறிக்கையாவது : ராசிபுரம் துணை மின் நிலையத்தில் பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை (22ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராசிபுரம், காக்காவேரி, புதுப்பாளையம், பட்டணம், வடுகம், வெள்ளாளப்பட்டி, சிங்காளந்தபுரம், கண்ணு£ர்பட்டி, ஜேடர்பாளையம், ஆண்டகலூர் கேட், குருசாமிபாளையம், மசக்காளிப்பட்டி, அத்தனூர், வையப்பமலை, அலவாய்ப்பட்டி, மொஞ்சனூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மின் விநியோகம் இருக்காது.

மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி, சாதனை படைக்க வேண்டும்

“மாணவர்கள் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி, சாதனை படைக்க வேண்டும்,” என்று பள்ளி விழாவில், துணை சபாநாயகர் தனபால்அவர்கள்  பேசினார்.ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்ஸெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 22 லட்சம் ரூபாய் மதிப்பில், டிஜிட்டல் கல்வி முறை துவக்க விழா நடந்தது.விழாவுக்கு, பள்ளி அறக்கட்டளைத் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். தாளாளர் தங்கவேல், பொருளாளர் சுப்ரமணியம், பள்ளித் தலைவர் துரைசாமி, பொருளாளர் வஜ்ரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை சபாநாயகர் தனபால், ஸ்மார்ட் வகுப்புகளை துவக்கி வைத்து பேசியதாவது:மேல் நாடுகளில், […]

மூதாட்டியின் கண்கள் தானம்

ராசிபுரம் மேரி ஆதரவற்றோர் கருணை இல்லத்தில் இருந்த ஆதரவற்ற மூதாட்டி உடல் நலமின்றி உயிரிழந்தார். அவரின் இரு கண்கள், ரோட்டரி சங்கத்தின் உதவியுடன்  சேலம் வாசன் ஐ கேர் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. ராசிபுரத்தில், மேரி ஆதரவற்றோர் கருணை இல்லத்தை மேரி என்பவர் நடத்திவருகிறார். உயிரிழந்த மூதாட்டி பச்சயம்மாள்(78) மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த நான்கு ஆண்டுக்கு முன், ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட்டில் சுற்றுத்திரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.