அருள் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

அருள் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

கீழப்பேட்டப்பாளையம் அருள் மாரியம்மன், விநாயகர் கோவிலில், செப்டம்பர் 2ம் தேதி, கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது.மோகனூர் யூனியன், கீழப்பேட்டப்பாளையத்தில் அருள் விநாயகர், அருள் மாரியம்மன், மதுரைவீரன் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேக விழா நடந்தது. அதை தொடர்ந்து, கோவில் புதுப்பிக்கும் பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கியது.திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், செப்டம்பர் 2ம் தேதி, கோவில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 31ம் தேதி […]

ஆம்புலன்ஸ் மீது பீர் பாட்டில் வீச்சு

ஆம்புலன்ஸ் மீது பீர் பாட்டில் வீச்சு

நாமக்கல்லில் இருந்து மோகனூருக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்று கொண்டிருந்தது. நெய்க்காரப்பட்டி அருகே சென்ற போது மோகனூரில் இருந்து சங்ககிரிக்கு ஒரு பயணிகள் வேன் வந்தது. அந்த வேனுக்குள் இருந்த ஒருவர் திடீரென பீர் பாட்டிலை தூக்கி வீசினார். அந்த பாட்டில் ஆம்புலன்ஸ் மீது விழுந்தது. இதில் கண்ணாடி உடைந்து, டிரைவர் சுரேஷ்குமார்(26) என்பவருக்கு காயம் ஏற்பட்டது.  சுரேஷ்குமார் காயத்துடன் அந்த பயணிகள் வேனை பின் தொடர்ந்து சென்று அனியாபுரம் பகுதியில் வழிமறித்தார். இதுகுறித்து மோகனூர் போலீசாருக்கு […]

பொங்கல் பண்டிகை – மாடு பூ தாண்டும் விழா

பொங்கல் பண்டிகை – மாடு பூ தாண்டும் விழா

நாமக்கல் மாவட்டத்தில், வாழவந்திநாடு, பிள்ளூர்நாடு உள்ளிட்ட இடங்களில் தொட்டியநாய்க்கர் சமூகத்தினர் பரவலாக வசித்து வருகின்றனர். அவர்கள், ஐந்து தலைமுறையாக மாடு பூ தாண்டும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காப்பு கட்டிய மறுநாள் முதல், ஊர் ஊராக சென்று நன்கொடை வசூல் செய்கின்றனர். தொடர்ந்து, ஊர் பெரியவர்கள் முன்னிலையில், மஞ்சள்தூள், ஆவாரம்பூ, கரும்பு, வெற்றிலை பாக்கு கொண்டு எல்லைக்கோடு அமைக்கின்றனர். தொடர்ந்து, கோவில் மாடுகளை குறிப்பிட்ட இடத்தில் இருந்து விரட்டுகின்றனர். அந்த […]

மோகனூரில் அறிவியல் கண்காட்சி

மோகனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் மோகன் தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் சிவசாமி கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.மோகனூர் டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் பாலு, ராசிபுரம் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி, ஒன்றியக் கவுன்சிலர் விஜயசேகர், பெற்றோர் ஆசிரியக் கழக தலைவர் பெரியசாமி உட்பட பலரும் கலந்துகொண்டனர். அதன் பின் பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவ மாணவியர்கள் அறிவியல் கண்காட்சியில்  இடம் பெற்றிருந்த அறிவியல் சாதனா பொருட்களை பார்வையிட்டனர்.