அலங்கார மீன் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி – வரும் 19ம் தேதி

அலங்கார மீன் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி – வரும் 19ம் தேதி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 19ம் தேதி காலை 9 மணிக்குஅலங்கார மீன் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெறுகிறது. இதில் அலங்கார மீன்களின் வகை, பராமரிக்கும் முறை, இனப்பெருக்க முறை பற்றி விளக்கம் அளிக்கப்படுகிறது. பண்ணைகளில் மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் அதை தீர்க்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்படுகிறது. அதிக லாபம் தரும் முட்டை இட்டு குஞ்சு பொறிக்கும் மீன் இனங்கள் பற்றி சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், நாமக்கல் […]

தனியார் வேலை வாய்ப்பு முகாம் – வரும் 20ம் தேதி

தனியார் வேலை வாய்ப்பு முகாம் – வரும் 20ம் தேதி

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தனியார் தொழில் துறை நிறுவனங்கள் சார்பில் வரும் 20ம் தேதி சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தனியார் தொழில் துறை நிறுவனங்கள் சார்பில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வரும் 20ம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் விற்பனையாளர், மார்கெட்டிங் எக்ஸிகியுட்டிவ், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், தட்டச்சர், […]

17 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்க இலக்கு – அமைச்சர் தங்கமணி

17 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்க இலக்கு – அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில், 17 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என தமிழக சுரங்கம் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம், ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஜே.கே.கே., கல்லூரி, ப.வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி, ஆகியவற்றில் படிக்கும், 2,024 மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்க்கு  கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சீதாலட்சுமி, […]

நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில் 43-ம் ஆண்டு விளையாட்டு போட்டி

நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில் 43-ம் ஆண்டு விளையாட்டு போட்டி

நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில் 43-ம் ஆண்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது. நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில் 43ம் ஆண்டு விளையாட்டு போட்டி 28.02.2012 அன்று  நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் லிங்கம்மாள் தலைமை வகித்தார். 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. அதில் 200 மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற மாணவிகளுக்கு நாமக்கல் அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி முதல்வர் கணேசன் […]

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை தொடங்க வேண்டும் – லாரி உரிமையாளர் சங்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை தொடங்க வேண்டும் – லாரி உரிமையாளர் சங்கம்

“மின் தடையால் லாரிகள் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் தடையை கட்டுப்படுத்த கூடங்குளத்தில் மின் உற்பத்தியை துவங்க வேண்டும்” லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியது : தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையால் உற்பத்தி பொருட்களின் அளவு குறைந்து விட்டது. இதனால் லாரிகளுக்கு லோடு குறைந்து வருகிறது. தற்போது தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கு ஒரு நாள் மின் விடுமுறை அளித்துள்ளது. இதனால் தொழிற்சாலைகளில் மேலும் உற்பத்தி பாதிக்கும்.  தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு 1.60 […]

வீசாணம் கிராமத்தில் காட்டுத்தீ

வீசாணம் கிராமத்தில் காட்டுத்தீ

நாமக்கல் மாவட்டம், வீசாணம் கிராமத்தில் உள்ள வனத்தில் திங்கள் அன்று ஏற்ப்பட்ட காட்டுத்தீ வனம் முழுவதும் பரவி அனைத்து மரங்களும் எரிந்து சாம்பலாகின. வீசாணம் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவில் வனம் உள்ளது. திங்கள் அன்று திடீரென்று ஏற்பட்ட  தீ விபத்தினால், தீ காடு முழுவதும் பரவியது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடினர். ஆனால் தீ காடுமுழுவதும் பரவியதால் முழுவதும் கட்டுப்படுத்த முடியவில்லை. தீ அருகில் உள்ள […]

சேலம்-கரூர் அகல ரயில்பாதை திட்டம்

சேலம்-கரூர் அகல ரயில்பாதை திட்டம்

கடந்த 1997ம் ஆண்டு துவங்கப்பட்ட, சேலம்-கரூர் அகல ரயில்பாதை திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. வரும் ஜூன் மாதம், இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து துவங்கும் வகையில், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்கவும், குளிரூட்டப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கவும், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷன் வழித்தடத்தில், ஈரோடு வழியாக தென் […]

வகுரம்பட்டி நாமக்கல் நகராட்சியுடன் இணைப்பு

வகுரம்பட்டி நாமக்கல் நகராட்சியுடன் இணைப்பு

வகுரம்பட்டி பஞ்சாயத்து நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்படும் என, நகராட்சி கவுன்சில் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல்  சேர்மன் கரிகாலன் தலைமையில் நகராட்சிக் கவுன்சில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் : சரவணன் (தி.மு.க.,): தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையை சமாளிக்க, கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரைந்து திறக்க வலியுறுத்தி, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்ப வேண்டும். சேர்மன் கரிகாலன்: கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பது தொடர்பாக, தமிழக முதல்வர், வல்லுநர் குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழுவினர் […]

புதிய பூங்கா தமிழ்புத்தாண்டு அன்று திறக்கப்படும் – ஆட்சியர் தகவல்

புதிய பூங்கா தமிழ்புத்தாண்டு அன்று திறக்கப்படும் – ஆட்சியர் தகவல்

நாமக்கல்லில் அமைக்கப்படும் புதிய பூங்கா தமிழ்புத்தாண்டு அன்று திறக்கப்பட இருப்பதாக நாமக்கல் ஆட்சியர் அறிவித்துள்ளார் நாமக்கல் பரமத்தி சாலையில், தன்னிறைவு திட்டத்தின் கீழ், ரூ.75 லட்சத்தில், 1.5 ஏக்கர் நிலத்தில் புதிய பூங்கா அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நடைபாதை, தியானமேடை, செயற்கை நீருற்று, சிறுவர் பூங்கா, ஆகியவை புதிய பூங்காவில் அமைய உள்ளன. பூங்கா அமைக்கும் பணிகளை ஆட்சியர் குமரகுருபரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பின் அவர் தெரிவித்ததாவது : நாமக்கல் […]

நாமக்கல்லில் புதிய பூங்கா அமைக்கும் பணி தீவிரம்

நாமக்கல்லில் புதிய பூங்கா அமைக்கும் பணி தீவிரம்

நாமக்கல்லில் புதிய  பூங்கா உருவாக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகின்றது. தினசரி காய்கறி மார்க்கெட் இருந்த இடத்தில் இப்பூங்கா அமைக்கப்படுகின்றது. இதனால் தினசரி காய்கறி மார்க்கெட் வார சந்தைக்கு இடம் மாற்றபட்டுள்ளது. செலம்ப கவுண்டர் பூங்காவும் புதிய பூங்காவுடன் இணைக்கப்பட்டதால், செலம்ப கவுண்டர் பூங்காவில் இருந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டுவிட்டன. தற்போது புதிய பூங்கா அமையும் இடத்தை சுற்றி சுற்றுசுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.