நாமக்கல்லில் 11 ம் தேதி மின்தடை

நாமக்கல்லில் 11 ம் தேதி மின்தடை

நாமக்கல் துணைமின்நிலையத்தில் 9 ம் தேதி மின்சார பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை காரணத்தால் 9 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடை, வரும் 11 ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையொட்டி  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பந்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முத்துக்காப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, கீரம்பூர் ஆகிய ஊர்களில் மின்சார வினியோகம் இருக்காது என்று […]

நாமக்கல்லில் 9 ம் தேதி மின்தடை – கிடையாது !

நாமக்கல்லில் 9 ம் தேதி மின்தடை – கிடையாது !

சற்றுமுன்: நாளை 09 – 08 – 2012 கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை காரணத்தால் பராமரிப்பு பணிகள் இரத்து செய்யப்பட்டது. எனவே நாளை மின்வெட்டு இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் துணைமின்நிலையத்தில் 9 ம் தேதி மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பந்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முத்துக்காப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, கீரம்பூர் […]

புதிய எஸ்.பி., பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட புதிய போலீஸ் எஸ்.பி., நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யாக இருந்த சத்தியப்பரியா, திருச்சி மாநகர துணைக் கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த பணியிடத்துக்கு, சென்னை உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் ஏ.டி.எஸ்.பி.,யாக இருந்த கண்ணம்மாள், பதவி உயர்வு அளிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர், நேற்று, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அண்ணன் இறந்த துக்கத்தில் தங்கையும் மரணம்

நாமக்கல் பெரியண்ணன் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (70). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது தங்கை நாகரத்தினம் (65). இவரது கணவர் சுப்பிரமணி கடந்த 15 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் நாகரத்தினம் தனது அண்ணன் வீட்டில் வசித்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஜெகநாதனை நேற்று மாலை உறவினர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நாகரத்தினம், மருத்துவமனைக்கு சென்று […]

குறிப்பிட்ட பள்ளிக்கு இடமாறுதல் பெற ரூ.2 லட்சம் பேரம்

அரசு, நகராட்சி, மாநகராட்சி,  உயர்நிலை,  மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தலைமையாசிரியர் ஆசிரியர்களுக்கு  2012-13ம் கல்வி ஆண்டுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் ஜூன் 16ம் தேதி துவங்குகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், பதவி உயர்வு கவுன்சலிங் என தனித்தனியாக நடத்தப்படுகிறது. இதை பயன்படுத்தி, சில புரோக்கர்கள் கல்லா கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஒரே மாவட்டத்துக்குள் பணி இடமாறுதல் பெறுவதற்கு குறிப்பிட்ட தொகையை கேட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை தொடர்பு கொண்டு வற்புறுத்தி வருகின்றனர். […]

பிளஸ் 2 கல்வித் தகுதியை பள்ளியிலேயே பதிவு செய்யலாம் – வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு

பிளஸ் 2 கல்வித் தகுதியை பள்ளியிலேயே பதிவு செய்யலாம் – வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்  மதிப்பெண் சான்றிதழ் பெறும் அன்றே கல்வி தகுதியை அவர்கள் படித்த பள்ளிகளிலேயே பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைந்து மேற்கொண்டுள்ளன. கல்வித் தகுதியை பதிவு செய்ய மாணவ, மாணவியர் மதிப்பெண் சான்றிதழ் பெற பள்ளிக்குச் செல்லும் போது குடும்ப அட்டை மற்றும் சாதி சான்றிதழை எடுத்து செல்ல வேண்டும். பத்தாம் வகுப்பு […]

+2 தேர்வு முடிவு, எல்லாமே நம்ம நாமக்கல்லுக்குத்தான்

+2 தேர்வு முடிவு, எல்லாமே நம்ம நாமக்கல்லுக்குத்தான்

+2 தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.கே.வி பள்ளி மாணவி சுஷ்மிதா 1189 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கே.வி பள்ளி மாணவி கார்த்திகா, நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியை சேர்ந்த மாணவன் அசோக்குமார், மற்றும் நாமக்கல் விவேகானந்தா பள்ளியைச் சேர்ந்த மாணவன் மணிகண்டன் ஆகியோர் 1188 மதிப்பெண்களை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர். நாமக்கல் எஸ்.கே.வி பள்ளி மாணவி பிரபாசங்கரி […]

நாளை நாமக்கல்லில் மின்தடை

நாளை நாமக்கல்லில் மின்தடை

நாமக்கல் துணை மின் நிலையத்தில் நாளை (21ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என்று உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் : நாமக்கல் துணை மின் நிலையத்தில், நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை, நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபாளையம், வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முத்துக்காப்பட்டி, முதலைப்பட்டி, […]

31 ஊர்ப்புற நூலகர் பணிக்கு 17ம் தேதிமுதல் 19ம் தேதி வரை நேர்முக தேர்வு

31 ஊர்ப்புற நூலகர் பணிக்கு 17ம் தேதிமுதல் 19ம் தேதி வரை  நேர்முக தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 31 ஊர்ப்புற நூலகங்களில் நூலகர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான நேர்முக தேர்வு  துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் 142 நூலகம் உள்ளது. ஒரு மைய நூலகம், 43 கிளை நூலகம், 66 ஊர்ப்புற நூலகம், 32 பகுதி நேர நூலகங்கள் இயங்கி வருகிறது. மொத்தமுள்ள 66 ஊர்புற நூலகங்களில் 31 நூலகர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது. தற்காலிக பணியாளர்களை நியமித்து நூலகங்கள் செயல்படுத்தப்பட்டது. […]