சேலம் – கரூர் அகல ரயில்பாதை திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது

சேலம் – கரூர் அகல ரயில்பாதை திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது

சேலம் – கரூர் அகல ரயில்பாதை திட்டம் : நாமக்கல்லில் ஜங்ஷன் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. தண்டவாளங்கள் அமைத்து சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. தண்டவாளங்களை குறிக்கிடும் சாலைகளில் ரயில்வே கேட் அமைக்கும் பணிகளும் விரைவாக நடந்து வருகின்றன.

நாமக்கல் ஜங்ஷன் மேம்பாலம் – தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

நாமக்கல் ஜங்ஷன் மேம்பாலம் – தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

நாமக்கல் ஜங்ஷன் மேம்பாலம் நாமக்கல் – சேந்தமங்கலம் சாலையில் ரயில்வே ஜங்ஷன் அருகில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. நாமக்கல்லில் இது மிகப்பெரிய மேம்பாலம் ஆகும். மேம்பாலம் அம்மைக்கும் பணி  முடிவடைந்த நிலையில் தார் சாலை அமைக்க ஜல்லி கொட்டப்பட்டு தார் சாலை அமைக்க தயார் செய்யப்படுகிறது. இதற்கான பணியில் ஆட்கள் ஈடுபட்டுள்ளனர்.

மனைவியை கொன்று கணவன் தற்கொலை

மனைவியை கொன்று கணவன் தற்கொலை

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று கணவன் தற்கொலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடு‌த்த ஆரியூர்நாடு பகுதியைச் சேர்ந்தவர் சோத்தமண பாண்டி(57). இவரது 2வது மனைவி சரசு(40). மனைவி சரசு நடத்தையில் சந்தேகப்பட்ட சோத்தமண பாண்டி, அவருடன் பலமுறை தகராறு செய்துள்ளார். பலமுறை கண்டித்தும் மனைவி கேட்கவில்லை.அதனால் ஆத்திரமடைந்த சோத்தமண பாண்டி,தனது மனைவி சரசுவை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு பிறகு தானும் தற்கொலை செய்து கொண்டார் . காலையில் வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த […]

நாமக்கல் செல்வம் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் செல்வம் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த  வேலைவாய்ப்பு முகாமில்  பல்வேறு கல்லூரிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். ரிலையன்ஸ்,நெட் ஏம்பிட், ஹிந்துஜா குளோபல் சர்வீஸ் போன்ற நிறுவனங்கள் இதில் பங்கேற்றன.அதில், 37 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அம்மாணவர்களுக்கு, கல்லூரி தாளாளர் டாக்டர் செல்வராஜ், செயலாளர் கவித்ராநந்தினி பாபு, முதல்வர் அருள்சாமி உட்பட பலர்  வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இன்று “டிசம்பர் – 1” உலக எய்ட்ஸ் தினம்

இன்று  உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் கடந்த 1988ம் ஆண்டு உலக சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் டிசம்பர் முதல் நாள் எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டது. எய்ட்ஸ் நோய்க்கு இதுவரை முறையான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை, இந்நோய் மருத்துவ துறைக்கே பெரும்  சவாலாக இருந்து வருகின்றது.  எய்ட்ஸ் நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் ஓரளவு கட்டுபடுத்த முடியுமே தவிர முழுவதும் குணபடுத்த முடியாது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நமக்கல்லிலும் அதிகம் உள்ளனர் என்பது வருத்தத்திற்குரியதாக உள்ளது. எய்ட்ஸ் […]

விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்தினால் கடும்நடவடிக்கை

இன்று முதல் நாமக்கல் நகரில் விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் நகரினுள்  சாலை ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்தப்படும் வாகனங்களினால் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நிறுத்துவதற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும், அதை மீறி வாகனங்களை நிறுத்தினால் அபராதம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட எஸ்.பி பிரவேஷ்குமார் தெரிவித்திருந்தார். அதன்படி  விதிமுறைகளை மீறி நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

1 8 9 10