செங்கல் சூளைகளில் சாம்பலாகும் பனை மரங்கள்

செங்கல் சூளைகளில் சாம்பலாகும் பனை மரங்கள்

ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் பரவியதாக கருதப்படும் பனை மரங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இயற்கை நண்பன். தமிழ்நாட்டின் அடையாளமாக பனைமரங்கள் கருதப்படுகின்றன. இந்தியாவில் தற்போது 7 முதல் 8 கோடி பனைமரங்கள் இருப்பதாகவும் இதில் சுமார் 4 கோடி பனைமரங்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடைய இந்த பனைகள் சமவெளிகள், பள்ளத்தாக்குகள், மலைகளிலும் வளரும் தன்மை கொண்டவை. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன. பனை […]

திருச்செங்கோட்டில் உலக காப்பிய தமிழ் ஆய்வு மாநாடு 21ம் தேதி நடக்கிறது

திருச்செங்கோட்டில் உலக காப்பிய தமிழ் ஆய்வு மாநாடு 21ம் தேதி நடக்கிறது

  உலக காப்பிய தமிழ் ஆய்வு 10வது மாநாடு திருச்செங்கோட்டில் வரும் 21ம் தேதி நடக்கவுள்ளது. திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை கல்லூரியில் வரும் 21ம் தேதி அனைத்து உலக காப்பியத்தமிழ் 10வது ஆய்வு மாநாடு நடக்கிறது. கே.எஸ்.ஆர். கல்லூரி, திருவையாறு தமிழ் ஐயா கல்வி கழகம் சார்பில் இந்த ஆய்வு மாநாடு நடக்கிறது. 21ம் தேதி காலை 9 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ரங்கசாமி தலைமை வகிக்கிறார். தமிழ்த்துறை தலைவர் கார்த்திகேயன் வரவேற்கிறார். […]

பள்ளிபாளையத்தில் ஈஷா யோகா பயிற்சி இன்று துவங்கியது

பள்ளிபாளையத்தில் ஈஷா யோகா பயிற்சி இன்று துவங்கியது

ஈஷா யோகா மையத்தின் சார்பில் நாளை (18ம் தேதி) பள்ளிபாளையத்தில் யோகா பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. கிருஷ்ணவேணி திருமண மண்டபத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் 6 மணி முதல் 9 மணி வரை தொடர்ந்து ஏழு நாட்கள் இந்த யோகா பயிற்சி நடைபெறுகிறது. 18ம் தேதி மாலை 6 மணிக்கு அறிமுக வகுப்பும் அதனை தொடர் ந்து முதல் நாள் வகுப்பும் நடைபெறும்.

மின்வெட்டைக் கண்டித்து திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம்

மின்வெட்டைக் கண்டித்து திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம்

மின்வெட்டுக்கு கண்டனம் தெரிவித்து, திருச்செங்கோட்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நிலவும் மின்வெட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டன. அண்ணா சிலையருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் கே.சி. பழனிசாமி, அமைப்புச் செயலர் என்.பழனியப்பன், மாவட்ட இளைஞர் அணி செயலர் சங்கர், மாவட்ட மகளிரணி செயலர் சுதா நடராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  

குடிபோதையில் பஸ் ஓட்டிய டிரைவருக்கு 1 மாதம் சிறை

குடிபோதையில் பஸ் ஓட்டிய டிரைவருக்கு 1 மாதம் சிறை

ஜன-23 மாலை 7 மணியளவில் குமாரபாளையத்திலிருந்து 30 பயணிகளுடன் பேருந்து புறப்பட்டது. ராஜம் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது பேருந்து தடுமாறியபடி வந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அச்சமடைந்து கூச்சலிட்டனர். அப்போது அப்பகுதியில் வாகன தணிக்கையில் இருந்த குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகம் பேருந்தை மறித்து நிறுத்தி டிரைவரை சோதித்தார். அப்போது டிரைவர் குமரேசன்(22) குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து குமரேசனை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பினர். இதில் குமரேசன் மது அருந்தி இருந்தது […]

திருச்செங்கோடு பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை

திருச்செங்கோடு பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை

திருச்செங்கோடு நகராட்சி எல்லையில் சுற்றுப்புற சூழலை  மாசு படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை  மற்றும் பயன்பாட்டிற்கு நகராட்சி  அதிரடியாக தடை விதித்துள்ளது. திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து நகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- திருச்செங்கோடு நகராட்சி எல்லைக்குள்  40 மைக்ரானுக்குக் கீழ் உளள  பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு, பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்படுகிறது. வெள்ளை மற்றும் தரச்சான்றில் குறிப்பிட்டுள்ள கலர்  அல்லாத பிளாஸ்டிக் […]

திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்ட் அருகே எம்.ஜி.ஆர்., முழு உருவச்சிலை

திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்ட் அருகே எம்.ஜி.ஆர்., முழு உருவச்சிலை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முழு உருவச்சிலை அமைக்க, நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிரைவேற்றப்பட்டது. திருச்செங்கோடு நகராட்சி கவுன்சில் கூட்டம், சேர்மன் சரஸ்வதி தலைமையில் நடந்தது. கமிஷனர் (பொறுப்பு) ரவி, துணைச் சேர்மன் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் : முருகேசன் (அ.தி.மு.க.,): திருச்செங்கோடு புது பஸ் ஸ்டாண்ட்டின் மூன்று புறமும் உள்ள நுழைவு வாயிலில் ஆக்கிரமிப்பு கடைகள் இருப்பதால், வாகன நெரிசல் ஏற்படுகிறது. […]

சாலை விபத்துக்களை குறைக்க இளைஞர்கள் முன் வர வேண்டும்

சாலை விபத்துக்களை குறைக்க இளைஞர்கள் முன் வர வேண்டும்

சாலை விபத்துக்களை குறைக்க இளைஞர்கள் முன் வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் கூறியுள்ளார். திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவியருக்கான வினாடி-வினா போட்டி நேற்று நடைபெற்றது. பரிசு வழங்கும் விழா விற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகௌரி தலைமை வகித்தார். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கண்ணையன் முன்னிலை வகித்தார். விழாவில் ஆட்சி யர் குமரகுருபரன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார். விழாவில் […]

அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர் நியமிக்கவேண்டும் – சி.பி.ஐ., மாநாட்டில் கோரிக்கை

அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர் நியமிக்கவேண்டும் – சி.பி.ஐ., மாநாட்டில் கோரிக்கை

பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என, மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய, நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்,பள்ளிபாளையத்தில் 5 -வது மாநாடு  நடந்தது. நிர்வாகி நல்லப்பன் தலைமை வகித்தார். பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிவேல் அவர்கள் பங்கேற்று பேசினார். மாநாட்டில் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் மற்றும் செவிலியர் இடங்கள்  கடந்த சில ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது. அதனால், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உரிய சிகிச்சை […]

24 -ம் தேதி வெப்படை, குமாரபாளையம் சமயசங்கிலி பகுதியில் மின்நிறுத்தம்

24 -ம் தேதி வெப்படை, குமாரபாளையம் சமயசங்கிலி பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. வெப்படை துணை மின் நிலையத்தில் வரும் 24ம் தேதி(சனி) மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெப்படை, இந்திரா நகர், பாதரை, ரங்கனூர் நால் ரோடு, புதுப்பாளையம், குட்டிகிணத்தூர், எலந்தகுட்டை, தாண்டாங்காடு, காந்திநகர், சின்னார்பாளையம், இகாட்டூர், புதுமண்டபத்தூர், களியனூர், மாம்பாளையம், மோளகவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், தெற்குபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் […]