இன்று சினிமா காட்சிகள், படப்பிடிப்புகள் ரத்து

இன்று சினிமா காட்சிகள், படப்பிடிப்புகள் ரத்து

திரையரங்கில் வசூலி்க்கப்படும் டிக்கெட்டுகளுக்கு சேவை வரி மூன்று மடங்கு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த 19ம் தேதி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி உதவியுடன்  நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். இந்த முயற்சி வீணானதால், திரையரங்குகளை ஒருநாள் மூடும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 23.02.2012 அன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தென்னிந்திய திரைப்பட சங்கத் தலைவர் சரத்குமாரும் தெரிவித்துள்ளார். திரையரங்க உரிமையாளர்கள், […]

நண்பன் – தமிழ் சினிமாவின் மற்றுமொரு பிரம்மாண்டம்

நண்பன் – தமிழ் சினிமாவின் மற்றுமொரு பிரம்மாண்டம்

நாமக்கல்லில் K.S திரையரங்கம் மற்றும் சக்திமயில் திரையரங்கில் வெளியாகியுள்ள நண்பன் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. நண்பன்  திரைப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் த்ரீ இடியட்ஸ்(2009) ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும்.இத்திரைப்படத்தின் மூலம் விஜயின் திரைப்படத்திற்கு முதன் முறையாக ஹாரிஸ் ஜயராஜ் இசை அமைத்துள்ளார். நண்பன் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கியது. பிறகு தரடூன், ஐரோப்பா, அந்தமான், கோயம்பத்தூர் மற்றும் சென்னையில் நடைபெற்றது. பாடல் காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு […]

நண்பன், வேட்டை திரைப்படங்களுக்கான வெளியீட்டு தேதிகள் அறிவிப்பு

நண்பன், வேட்டை திரைப்படங்களுக்கான வெளியீட்டு தேதிகள் அறிவிப்பு

தமிழ் திரையுலகில் வருகிற பொங்கலுக்கு நண்பன், வேட்டை திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.், தமிழ் திரையுலகில் பெரிய இயக்குனர்கள் இயக்கியுள்ள நண்பன், வேட்டை திரைப்படங்கள் பொங்கலுக்கு திரையிடப்பட உள்ளன. இயக்குனர் ஷங்கரின் நண்பனில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நாயகன்களாக நடித்துள்ளனர். நண்பன்,  வெபாலிவுட்டில்ளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அடுத்ததாக மாதவன், ஆர்யா நடித்துள்ள வேட்டை திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியுள்ளார். நாயகிகளாக சமீரா ரெட்டி, அமலா பால் நடித்துள்ளார். ஆர்யா, மாதவன் இருவரும் அண்ணன், […]

தனுஷ் பரிவு – சிம்புத்தேவன் சிபாரிசு – வடிவேலு ரீஎன்ட்ரி!

தனுஷ் பரிவு – சிம்புத்தேவன் சிபாரிசு – வடிவேலு ரீஎன்ட்ரி!

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலோடு, காணாமல் போனவர்கள் பற்றிய பட்டியலில் இடம் பெற்றிருப்பவர் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் ஒருவர். சமீபத்தில் இயக்குனர் சிம்புத்தேவன் தனுஷை வைத்து அவர் எடுக்க இருக்கும் அடுத்த படத்தில் வடிவேலு காமெடியனாக நடித்தால் நன்றாக இருக்கும் என சிபாரிசு செய்திருக்கிறார். ஏற்கனவே தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் வடிவேலு கால்ஷீட் பிரச்னையால் மாற்றப்பட்டார். இதனால் தனுஷ், தனது கோரிக்கையை ஏற்றுக் கொள்வாரா என தயக்கத்தில் இருந்தாராம் சிம்புத்தேவன்.  தனுஷ் பெருந்தன்மையாக, ஏற்கனவே […]

30-ம் தேதி 13 படங்கள் திரைக்கு வருகின்றன

30-ம் தேதி 13 படங்கள் திரைக்கு வருகின்றன

டிசம்பர் 30-ம் தேதி 13 படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. மதுவும் மைதிலியும், பாவி, கருத்த கண்ணன், ரேக்ளா ரேஸ், பதினெட்டான்குடி வினாயகா, மகான் கணக்கு, வழிவிடு கண்ணே வழிவிடு, அபாயம், வேட்டையாடு, மகாராஜா ஆகிய 10 தமிழ் படங்கள் மற்றும் வேட்டை நாயகன், ஸ்பீட்-2, புயல் வீரன் போன்ற மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் என மொத்தம் 13 படங்கள் 30-ம் தேதி வெளியாக உள்ளன.

விஜய் இடத்தை கைப்பற்றினார் சூர்யா

விஜய் இடத்தை கைப்பற்றினார்  சூர்யா

கோலிவுட்  ஃபாக்ஸ் ஆபீஸின் வசூல் சக்கரவர்த்திகள் என்றால் ரஜினி, கமல், விஜய், அஜீத் என்ற நிலையை மாற்றியுள்ளது ஏழாம் அறிவு திரைப்படம். கோலிவுட் ஃபாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் சென்னையில் தசாவதாரம், எந்திரன் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ஒன்பது கோடியை‌த் தாண்டி வசூல் செய்திருந்தது. 7-ஆம் அறிவு முதல் நான்கு வார முடிவில் சென்னையில் மட்டும் 10.5 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரஜினி, கமல், விஜய் என்றிருந்த நிலை மாறி தற்போது ரஜினி, கமல், சூர்யா […]

துப்பாக்கியில் இணையும் விஜய், காஜல் அகர்வால்

துப்பாக்கியில் இணையும் விஜய், காஜல் அகர்வால்

ஏழாம் அறிவு வெற்றிக்குப் பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் துப்பாக்கி. நண்பன் திரைப்படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் இந்த படத்தில் அவருடன் காஜல் அகர்வால் இணைகிறார். இப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். விஜய் தனது தோற்றத்தை பெரும்பாலும் திரைப்படங்களில் மாற்ற மாட்டார். ஆனால் வசீகரா திரைப்படத்திற்குப் பிறகு நடித்த திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு தன்னுடைய தோற்றத்தை மாற்றி நடித்திருக்கிறார். இந்நிலையில் […]

உலகம்முழுவதும் ஒஸ்தி இன்று ஒசத்தியாக ரிலீஸ்

உலகம்முழுவதும் ஒஸ்தி  இன்று ஒசத்தியாக  ரிலீஸ்

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு & ரிச்சா நடித்த ஒஸ்தி இன்று உலகம் முழுவதும் வெளியாகின்றது. தரணி இயக்கத்தில் வெளிவந்துள்ள ஒஸ்தி தமன் இசையில் அனைத்து பாடல்களும் “சூப்பர் ஹிட்”. மல்லிகா செராவத் கவர்ச்சி ஆட்டத்தில் “கலாசால” பாடல் அனைவரையும் கவந்துள்ளது. சந்தானம், சரண்யாமோகன் ஆகியோரும் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாமக்கல் LMR திரையரங்கில் முதல் காட்சிக்காக ரசிகர்கள் காலை 6 மணி முதல் காத்துக்கொண்டிருந்தனர். LMR திரையங்கம் முன் சிம்புவின் […]

துப்பாக்கி தயாராகிறது

துப்பாக்கி தயாராகிறது

துப்பாக்கி தயாரிக்கும் பணியில் அதன் இயக்குனர் முருகதாஸ் ஈடுபட்டுள்ளார். இளையதளபதி விஜய் சுடும் “துப்பாக்கி” திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர்-5 முதல் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. விஜய்க்கு ஜோடியாக காஜல்அகர்வால் நடிக்கிறார். நண்பன் திரைப்படம் முடிந்தநிலையில் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் நம் இளையதளபதி.