பூமியை தாக்கும் சூரிய புயல் – நாசா

பூமியை தாக்கும் சூரிய புயல் – நாசா

“கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல், இன்று பூமியைத் தாக்கும். இதனால், செயற்கைக்கோள்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். பூமியில் சில பகுதிகளில் கதிர்வீச்சு நேரிடலாம்” என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்களால், கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து, அலைகளை வீசுவது, சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல் எனப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சூரியனின் மேற்புறம் அமைதியாகவே […]

இனி ஃபேஸ்புக்கிலும் ஐசிஐசிஐ வங்கி…!

இனி ஃபேஸ்புக்கிலும் ஐசிஐசிஐ வங்கி…!

நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி, சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் விரைவில் இணைய உள்ளது. இதன் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கி கணக்கு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்க உள்ளதாக ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக  இயக்குனர் ராஜீவ் சபர்வால் அறிவித்துள்ளார்.

பிரிட்டனில் ட்விட்டர் சேவை ஒரு மணிநேரம் முடங்கியது

பிரிட்டனில் ட்விட்டர்  சேவை  ஒரு மணிநேரம் முடங்கியது

அதிகளவில் புத்தாண்டு வாழ்த்துக்கள் வந்ததினால் ட்விட்டர்  சேவை  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கி விட்டது. ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலமாக நேற்று முன்தினம் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில் பிரிட்டனில் நேற்று முன்தினம் மதிய நேரத்தில் ட்விட்டர் முடங்கி விட்டது. நிமிடத்துக்கு 16 ஆயிரத்து 197 வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால் ட்விட்டர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கி விட்டது. இதன் காரணமாக […]

“ராணா” -விற்கு முன் ரஜினி நடிக்கும் “கோச்சடையான்”

“ராணா” -விற்கு முன் ரஜினி நடிக்கும் “கோச்சடையான்”

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் கோச்சடையான். இது முப்பரிமாண (3D) படம். ராணாவிற்கு முன்  திரைக்கு வரவிருக்கும் படம். இது இந்தியாவில் தயாராகும் முதல் 3-D படம் என்பது பெருமைக்குரியது. சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் டைரக்ஷன் மேற்பார்வை கே.எஸ்.ரவிக்குமார். இப்படம் ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தினர் தயாரிக்கின்றனர். ரஜினியின் மகள் சவுந்தர்யா அஸ்வின் இப்படத்தை இயக்குகிறார். ஆகஸ்ட் 2012-ல் திரைக்கு வரவிருக்கிறது. விரைவில் இப்படத்தின் […]