நாமக்கல் செங்கலிநீர் பிள்ளையார் கோவிலில் சிறப்பு யாகம்

நாமக்கல் செங்கலிநீர் பிள்ளையார் கோவிலில் சிறப்பு யாகம்

நாமக்கல்: நகரில் உள்ள பிரசித்திப்பெற்ற செங்கலிநீர் பிள்ளையார் கோவிலில், நாளை விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு இன்று லட்ச்சாதனை சிறப்பு யாகம் துவங்கியது. நாளை விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நகரின் பல இடங்களிலும் விநாயகர் சிலைகள் மக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதம், அம்மன் தரிசனம்

ஆடி மாதம், அம்மன் தரிசனம்

  சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்றும் அரவணைக்கும் மாதம், ஆடி. பக்தர்கள், நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியை வேப்பிலை முதல் விக்கிரகங்கள் வரை எல்லாவற்றினுள்ளும் கண்டு வணங்குகிறார்கள். பெண்ணின் தாய்மைப் பரிவாகவும் வீறு கொண்டெழும் காளி ப்ரவாகமாகவும் பாம்பின் புற்றினூடேவும் சிலுசிலுக்கும் பச்சை மரங்களினூடேயும் நட்டு வைத்த கல்லுக்குள்ளும் அம்பாள் பரிமளிக்கிறாள். ‘‘அதோ அந்த புற்றினுள் நான் தவமிருக்கிறேன். அங்கு வந்து என்னைப் பார், எனக்கு ஆலயம் உருவாக்கு’’ என்று பக்தர் கனவில் பேசியிருக்கிறாள். எந்த பிரச்னை ஆனாலும் […]

தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழநியில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூச திருவிழா. 10 நாட்கள் நடைபெறும் இந்த தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பழனியில் பிப்ரவரி 6-ம் தேதி : திருக்கல்யாணம் பிப்ரவரி 7-ம் தேதி திருத்தேரோட்டம் திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி புதுச்சேரி சப்பரம், வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி யானை உள்ளிட்ட […]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றம் மாலையில் மகா தீபம் ஏற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றம் மாலையில் மகா தீபம் ஏற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொண்டாடப்படும் கார்த்திதை தீப திருவிழா மிகவும் சிறப்பாக இருக்கும் . இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டுள்ளது . அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகா தீபம்ஏற்றப்பட உள்ளது. இன்று  திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. தீப திருநாளை முன்னிட்டு 8ஆம் தேதி அதிகாலை 2மணிக்கு கோயில் நடைகள் திறக்கப்பட்டு விநாயகர், முருகர்  வள்ளி தெய்வாணை, அண்ணாமலையார், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு […]

நாமக்கல் ஆஞ்சநேயர் – வடமாலை வழிபாடு

நாமக்கல் ஆஞ்சநேயர் – வடமாலை வழிபாடு

இன்று கார்த்திகை-17 சனிக்கிழமை. ஆஞ்சநேயருக்கு வடமாலை அணிவித்து சிறப்புவழிபாடுகள் நடைபெற்றன. மக்கள் கூட்டத்தில் ஆஞ்சநேயர் சன்னதி இருந்தது. ஒவ்வொரு சனிக்கிழமையும் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடமாலை அணிவித்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.