குரூப் 2 தேர்வு ரத்து : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

குரூப் 2 தேர்வு ரத்து : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

தமிழகத்தில் நேற்று(12.08.2012)  நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி தேர்வாணைய தலைவர் நட்ராஜ் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை, 6.4 லட்சம் பேர் எழுதினர். தேர்வுதாள் ஈரோடு மாவட்டத்தில் வெளியானது குறித்து, டி.என்.பி.எஸ்.சி. அவசரமாக கூடி விவாதித்தது . இதில் தேர்வாணைய உறுப்பினர்களுடன் நட்ராஜ் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பின் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார். ரத்து […]

நாமக்கல்லில் 11 ம் தேதி மின்தடை

நாமக்கல்லில் 11 ம் தேதி மின்தடை

நாமக்கல் துணைமின்நிலையத்தில் 9 ம் தேதி மின்சார பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை காரணத்தால் 9 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடை, வரும் 11 ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையொட்டி  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பந்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முத்துக்காப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, கீரம்பூர் ஆகிய ஊர்களில் மின்சார வினியோகம் இருக்காது என்று […]

நாமக்கல்லில் 9 ம் தேதி மின்தடை – கிடையாது !

நாமக்கல்லில் 9 ம் தேதி மின்தடை – கிடையாது !

சற்றுமுன்: நாளை 09 – 08 – 2012 கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை காரணத்தால் பராமரிப்பு பணிகள் இரத்து செய்யப்பட்டது. எனவே நாளை மின்வெட்டு இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் துணைமின்நிலையத்தில் 9 ம் தேதி மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பந்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முத்துக்காப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, கீரம்பூர் […]

ஈமு கோழி விளம்பரத்தில் நடித்த 2 நடிகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு!

ஈமு கோழி விளம்பரத்தில் நடித்த 2 நடிகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு!

சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்த தமிழ் நடிகர்கள் இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரூபாய் ஒன்றரை லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூபாய் 6 ஆயிரம் தரப்படும் எனக் கூறி, சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனம் பலரிடம் பணம் வசூல் செய்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துûறையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனம், கடந்த இரண்டு மாதமாக லாப தொகையை வழங்கவில்லை என்பது முதலீட்டார்கள் புகார் கூறியுள்ளனர். […]

சுசி ஈமு – கோழிப்பண்ணை முற்றுகை

சுசி ஈமு – கோழிப்பண்ணை முற்றுகை

ஈமு கோழிப்பண்ணையின் தாயகம் என சொல்லப்படும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுசி ஈமுக்கோழிப்பண்ணை இழுத்து மூடப்பட்டது.. நேற்று அங்கே ஒரே பரபரப்பாக இருந்தது, மக்கள், முதலீட்டாளர்கள் கூட்டம் கூடி இருந்தது.. கொடுத்த பணத்தை திருப்பிக்கொடு என்று கோஷம் போட்டார்கள். ஆர் பார்த்திபன், கே பாக்யராஜ், பரவை முனியம்மா போன்ற பலர் பணத்தை வாங்கிக்கொண்டு எல்லாம் தெரிந்தவர்கள் போல கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டை படித்து நடித்து விட்டுப்போகிறார்கள்.. இது சமுதாயத்தை எந்த அளவு பாதிக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை..  ஒரு […]

ஆடி மாதம், அம்மன் தரிசனம்

ஆடி மாதம், அம்மன் தரிசனம்

  சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்றும் அரவணைக்கும் மாதம், ஆடி. பக்தர்கள், நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியை வேப்பிலை முதல் விக்கிரகங்கள் வரை எல்லாவற்றினுள்ளும் கண்டு வணங்குகிறார்கள். பெண்ணின் தாய்மைப் பரிவாகவும் வீறு கொண்டெழும் காளி ப்ரவாகமாகவும் பாம்பின் புற்றினூடேவும் சிலுசிலுக்கும் பச்சை மரங்களினூடேயும் நட்டு வைத்த கல்லுக்குள்ளும் அம்பாள் பரிமளிக்கிறாள். ‘‘அதோ அந்த புற்றினுள் நான் தவமிருக்கிறேன். அங்கு வந்து என்னைப் பார், எனக்கு ஆலயம் உருவாக்கு’’ என்று பக்தர் கனவில் பேசியிருக்கிறாள். எந்த பிரச்னை ஆனாலும் […]

ஐஏஎஸ், வங்கி, அரசு பணிகளுக்கான தேர்வுகள் தரம் உயர்த்தப்படுகின்றன

ஐஏஎஸ், வங்கி, அரசு பணிகளுக்கான தேர்வுகள் தரம் உயர்த்தப்படுகின்றன

  ஐஏஎஸ், ஐபிஎஸ், வங்கி, அரசுப் பணிகளில் சேருவதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்காக 6 லட்சம் வினாக்களை தயாரிக்கும் பணியில் பேராசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், வங்கிப் பணிகள், மாநில அரசு பணிகளில் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக  நடத்தப்படும் தேர்வுகளின் தரம் உயர்த்தப்படுகின்றது. இதற்காக மத்திய அரசின் மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின் கண்காணிப்பில் மைசூரை தலைமையிடமாகக் கொண்டு இந்திய தேசிய தேர்வுப்பணி மற்றும் மதிப்பீட்டு மையம் செயல்படுகிறது. இந்த மையத்தின்கீழ் […]

பைக் மோதி தொழிலாளி பலி

பரமத்திவேலூர் ஊஞ்சப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு (55). அதே பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (50). இருவரும் கூலித் தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் பைக்கில் பரமத்தி வேலூருக்கு சென்றனர். பின்னர் மீண்டும் ஊஞ்சப்பாளையத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காமாட்சி நகர் பகுதியில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த துரைசாமி மற்றொரு பைக்கில் வந்த அருணாகிரி […]

திருச்செங்கோட்டில் உலக காப்பிய தமிழ் ஆய்வு மாநாடு 21ம் தேதி நடக்கிறது

திருச்செங்கோட்டில் உலக காப்பிய தமிழ் ஆய்வு மாநாடு 21ம் தேதி நடக்கிறது

  உலக காப்பிய தமிழ் ஆய்வு 10வது மாநாடு திருச்செங்கோட்டில் வரும் 21ம் தேதி நடக்கவுள்ளது. திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை கல்லூரியில் வரும் 21ம் தேதி அனைத்து உலக காப்பியத்தமிழ் 10வது ஆய்வு மாநாடு நடக்கிறது. கே.எஸ்.ஆர். கல்லூரி, திருவையாறு தமிழ் ஐயா கல்வி கழகம் சார்பில் இந்த ஆய்வு மாநாடு நடக்கிறது. 21ம் தேதி காலை 9 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ரங்கசாமி தலைமை வகிக்கிறார். தமிழ்த்துறை தலைவர் கார்த்திகேயன் வரவேற்கிறார். […]

ஜூலை 20ல் வேலைவாய்ப்பு முகாம்

ஜூலை 20ல் வேலைவாய்ப்பு முகாம்

முத்தாயம்மாள் இன்ஜி., கல்லூரியில் ஜூலை 20ல் வேலைவாய்ப்பு முகாம் சென்னை தென்மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி வாரியமும், ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியும் இணைந்து, ஜூலை 20 மற்றும் 27 தேதிகளில், மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளது. ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இம் முகாமில், 2010 முதல் 2012ம் ஆண்டுகளில் டிப்ளமோ, ப்ளஸ் 2 கல்வியில் தொழிற்பிரிவு படித்தவர்களுக்கும், இன்ஜினியரிங் பட்டம் பெற்ற பட்டதாரிகளும் பங்கேற்கலாம். ஜூலை 20ம் தேதி, டிப்ளமோ […]