ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு இலவச பயிற்சி துவக்கம்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு இலவச பயிற்சி துவக்கம்

  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது. நாமக்கல் கிளை நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் கலந்து கொள்ள மாணவ, மாணவியருக்கு இங்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி துவக்க விழா ஆட்சியர் குமரகுருபரன் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: இந்த மையத்தில் பயிற்சி பெற 179 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டு 60 பேர் […]

கார் மோதி மேஸ்திரி பரிதாப சாவு

சேந்தமங்கலம் அருகே வடுகப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (34). இவரது நண்பர் ராஜா(26).  கட்டிட மேஸ்திரிகள். நேற்று முன்தினம் இருவரும், சேந்தமங்கலத்தில் இருந்து பைக்கில் கரூர் சென்றனர். பின்னர் கரூரில் இருந்து சேந்தமங்கலத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பரமத்தி பைபாஸ் பிரிவு ரோடு அருகே வந்த போது அவ்வழியாக வந்த கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராஜா பலத்த காயம் அடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

கல்வி உதவித்தொகை மோசடி மாவட்ட அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை பாய்கிறது

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரக்குறைவான தொழில் செய்பவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் ராமசந்திரனை நேற்று முன் தினம் தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளர் ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே கல்வி உதவித் தொகையை கையாடல் செய்த, காரைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி ஆசிரியர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். 3 தலைமை ஆசிரியர்களை போலீசார் தேடிவருகிறார்கள். இந்நிலையில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மாவட்ட அதிகாரி ராமசந்திரன் […]

ராசிபுரத்தில் ரூ54 லட்சத்தில் நூலக கட்டிட பணி துவக்கம்

ராசிபுரத்தில் ரூ54 லட்சத்தில் நூலக கட்டிட பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கிளை நூலக கட்டிடம் கட்டும் பணி ரூ54 லட்சத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. பணி துவக்க விழா மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் தலைமையில் நடந்தது. சட்டப்பேரவை துணைத்தலைவர் தனபால் கட்டுமான பணியை துவக்கி வைத்தார். அவர் பேசும்போது, இந்த நூலக கட்டிடம் 3196 சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது. தரை தளத்தில் முன்புற வராண்டா, நூலக அறை, நூல்கள் இருப்பறை, படிப்பறை, பதிவறை, சிறுவர்கள், பெண்கள் படிப்பறை மற்றும் முதியவர்கள் படிக்கும் அறை ஆகியவை […]

செங்கல் சூளைகளில் சாம்பலாகும் பனை மரங்கள்

செங்கல் சூளைகளில் சாம்பலாகும் பனை மரங்கள்

ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் பரவியதாக கருதப்படும் பனை மரங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இயற்கை நண்பன். தமிழ்நாட்டின் அடையாளமாக பனைமரங்கள் கருதப்படுகின்றன. இந்தியாவில் தற்போது 7 முதல் 8 கோடி பனைமரங்கள் இருப்பதாகவும் இதில் சுமார் 4 கோடி பனைமரங்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடைய இந்த பனைகள் சமவெளிகள், பள்ளத்தாக்குகள், மலைகளிலும் வளரும் தன்மை கொண்டவை. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன. பனை […]

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அழைப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையுடன் வரவேண்டும். 8ம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ, மாணவியர் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அட்டை பெற்றிருக்க வேண்டும். வேறு எந்த துறையிலும் உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் மாத […]

நாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்.

நாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்.

நாட்டின், 66வது சுதந்திர தினவிழா, நாமக்கல்லில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, பல்வேறு துறை சார்பில், 222 பேருக்கு, 33 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டுத் திடலில், நாட்டின், 66வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதை தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சென்று, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை, கலெக்டர் குமரகுருபரன் […]

இனி சாம்சங் மொபைல் சாதனங்களை கணினியிலிருந்தே இயக்கலாம்.!!!

இனி சாம்சங் மொபைல் சாதனங்களை கணினியிலிருந்தே இயக்கலாம்.!!!

சாம்சங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட் மொபைல் சாதனங்களை பயன்படுத்தி ரிமோட் கண்ட்ரோல் மூலம் கணினியை இயக்கலாம். ஆனால் கணினியை பயன்படுத்தி ரிமோட் கண்ட்ரோல் மூலம் சாம்சங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட்களை இயக்க முடியாது. ஆனால் தற்போது அவற்றை இயக்கும் வகையில் புதிய முறையை Team Viewer அறிமுகப்படுத்தியுள்ளது. இனி சாம்சங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட் மொபைல் சாதனங்களை ரிமோட் கண்ட்ரோல் மூலம் உங்கள் கணினி உதவியுடன்  இயக்க முடியும். நீங்கள் இயக்க இதோ […]

லிட்டில் பிரிண்டர் – அச்சுப்பிரதியின் மறுபிறப்பு (Little Printer and the rebirth of the hard copy)

லிட்டில் பிரிண்டர் – அச்சுப்பிரதியின் மறுபிறப்பு (Little Printer and the rebirth of the hard copy)

  மாட் வெப் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த லிட்டில் பிரிண்டர். மற்ற பிரிண்டர்களை விட அளவில் மிக மிக சிறியதாகவும், அதிநவீன தொழில்நுட்பத்திலும் உறுவாக்கப்பட்டுள்ளது. இந்த லிட்டில் பிரிண்டர்யை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் இருந்து நமக்கு தேவையான தகவல்கள், முக்கிய குறிப்புகள், ஆகியவற்றை கணினி அல்லது செல்போன் மூலமாக உடனே பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம். சிறு இரசீது போன்ற அளவில் மட்டுமே பிரதிகளை எடுக்கமுடியும். லிட்டில் பிரிண்டரை பயன்படுத்தி முக்கிய குறிப்புகள், பிறந்தநாள் தேதிகள், தினசரி […]

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

உங்கள் இணைய தளமான வணக்கம் நாமக்கல் இணைய தளத்திற்கு வருகை தந்த தாங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்.   புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம். பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோ டதை எங்கள் உயிரென்று காப்போம் (புதிய) இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம் “இது எனதெ”ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம். (புதிய) உணர் வெனும் கனலிடை அபர்வினை எரிப்போம் “ஒரு பொருள் தனி” எனும் […]