நாமக்கல்: நகரில் உள்ள பிரசித்திப்பெற்ற செங்கலிநீர் பிள்ளையார் கோவிலில், நாளை விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு இன்று லட்ச்சாதனை சிறப்பு யாகம் துவங்கியது. நாளை விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நகரின் பல இடங்களிலும் விநாயகர் சிலைகள் மக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலூர் பேரூராட்சி: இன்று காலை மாவட்ட ஆட்சியர் திரு.தட்சணாமூர்த்தி அவர்கள் வேலூர் பேரூராட்சியில் இயங்கி வரும் “குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும்” பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். –
இன்று முதல் நாமக்கல் வழியாக சரக்கு இரயில் சேலம்,நாமக்கல்,கரூர் இடையே சரக்கு இரயில் போக்குவரத்து இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று மதியம்(15.11.2012) முதல் முதலாக சரக்கு இரயில் விடப்பட்டுள்ளது. சரக்கு இரயில் சேலம்-கரூர் இடையே முதல் கட்டமாக இயக்கப்படுகிறது. மிக விரைவில் பயணிகள் இரயிலும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினம் ஒரு தொழில் நுட்பத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நாமக்கலில் தற்போது இரயில் போக்குவரத்தும் துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. […]
Download Links for the Answer Keys are below, Download V.A.O Answer Key for General Knowledge (GK) Questions Download V.A.O Answer Key for Tamil Questions Download V.A.O Answer Key for English Questions
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த குமரகுருபரன், சென்னை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தின் 10வது ஆட்சியராக நியமிக்கப்பட்ட ஜெகநாதன் (48) நேற்று(07-09-2012) பொறுப்பேற்றார். புதிய ஆட்சியர் ஜெக நாதன் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது : அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது அரசு அலுவலர்களின் கடமை. இதை நிறைவேற்ற அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒரு குழுவாக இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையும். […]
நாமக்கல் துணை மின் நிலையத்தில், வரும், 7ம் தேதி, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே, அன்று காலை, 9 மணி முதல் மாலை, 5.30 மணி வரை, நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முத்துக்காப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, கீரம்பூர் ஆகிய பகுதிகளில், மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது
நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்த குமரகுருபரன், செய்தி விளம்பரத்துறை இயக்குனராக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று, ஓராண்டு மட்டுமே ஆன நிலையில், அவரது இடமாற்றம், அனைத்து தரப்பினர் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் முழுவதும், பூங்கா, போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்தவர், மாவட்ட கலெக்டர் குமரகுருபரன். நாமக்கல் மக்களின் குறைகளை அறிய சமூக வலைத்தலமான FACEBOOK ல் Namakkal Collector என்ற பெயரில் கணக்கை தொடங்கி […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், பண்ருட்டி அருகே பதுங்கியிருந்த திருக்கோவிலூரைச் சேர்ந்த இன்ஜினியரை தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக தர்மபுரி சுரேஷ்குமார், விழுப்புரம் ரங்கராஜன், திருவண்ணாமலை விவேகானந்தன், வேலூர் அன்பு, கிருஷ்ணகிரி பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான திருவண்ணாமலை கார்த்திக், விழுப்புரம் டாக்டர் சுரேஷ், இவரது தம்பி […]
கீழப்பேட்டப்பாளையம் அருள் மாரியம்மன், விநாயகர் கோவிலில், செப்டம்பர் 2ம் தேதி, கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது.மோகனூர் யூனியன், கீழப்பேட்டப்பாளையத்தில் அருள் விநாயகர், அருள் மாரியம்மன், மதுரைவீரன் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேக விழா நடந்தது. அதை தொடர்ந்து, கோவில் புதுப்பிக்கும் பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கியது.திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், செப்டம்பர் 2ம் தேதி, கோவில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 31ம் தேதி […]