தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் ‘ஸ்லிம்’ ஆகலாம்

இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழக உடலியல் பேராசிரியர்கள் நடத்திய ஆராய்ச்சியில் வெளியான தகவல் :

காலை எழுந்ததும் காலியான வயிற்றில் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் சாப்பிடக்கூடிய உணவுகளின் அதிக கலோரிகளை கட்டுப்படுத்தலாம்.

கலோரிகளை கட்டுப்பாட்டில் வைக்கும் திறன் முட்டையில் இருக்கிறது. எனவே, காலை உணவுடன் முட்டை சேர்த்துக் கொண்டால் மதிய உணவு, இரவு டின்னர் மற்றும் இடையே சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகியவற்றால் சேரும் கலோரிகள் தடுக்கப்படும். காலை உணவில் முட்டை சேர்ப்பவர்களுக்கு மதிய உணவை அதிகம் சாப்பிடும் உணர்வு ஏற்படாது. இதனால், எடை மற்றும் தொப்பை கட்டுப்பாட்டில் இருக்கும் என்கிறது ஆராய்ச்சி முடிவு.

Leave a Reply

Your email address will not be published.