31 ஊர்ப்புற நூலகர் பணிக்கு 17ம் தேதிமுதல் 19ம் தேதி வரை நேர்முக தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 31 ஊர்ப்புற நூலகங்களில் நூலகர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான நேர்முக தேர்வு  துவங்கியது.

நாமக்கல் மாவட்டத்தில் 142 நூலகம் உள்ளது. ஒரு மைய நூலகம், 43 கிளை நூலகம், 66 ஊர்ப்புற நூலகம், 32 பகுதி நேர நூலகங்கள் இயங்கி வருகிறது. மொத்தமுள்ள 66 ஊர்புற நூலகங்களில் 31 நூலகர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்த பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது. தற்காலிக பணியாளர்களை நியமித்து நூலகங்கள் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில், பொது நூலகத்துறை உத்தரவின் பேரில் வேலைவாய்ப்பு அலுவலம் மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பிளஸ் 2 மற்றும் சி.எல்.ஐ.எஸ். படிப்பு முடித்து பதிவு செய்த பட்டயத்தார்களை தேர்வு செய்ய மாவட்ட நூலகத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் தகுதியுள்ள 160 பேருக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. நேர்முக தேர்வுகள்  (17ம் தேதி) முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

விகிதாச்சார அடிப்டையில் 160 பேரில் தகுதியுடைய 31 பேர் ஊர்ப்புற நூலகர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.