1 முதல் 8ம் வகுப்பு வரை ஒரே புத்தகம் அறிமுகம்

Textbookதமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் தேர்வு மற்றும் மதிப்பெண் முறையில் புதிய நடைமுறை புகுத்தப்பட்டுள்ளது. இதுவரை காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என 3 பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்பட்டன. இறுதித்தேர்வில் ஆண்டு முழுவதும் படித்த அனைத்துப் பாடங்களையும் படித்து தேர்வு எழுத வேண்டும். இதனால், மாணவர்கள் அனைத்துப் புத்தகங்களையும் தினமும் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. மேலும் தேர்வுச்சுமையும் இருந்தது. இந்நிலையை  நீக்க இந்தக் கல்வி ஆண்டு முதல் முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி காலாண்டுத் தேர்விற்கான பாடங்களை அரையாண்டுக்கும், அரையாண்டு வரைப் படித்த பாடங்களை முழு ஆண்டுத் தேர்வுக்கும் படிக்கத் தேவையில்லை. இதற்காக புத்தகங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒவ்வொரு பருவத்திற்கான பாடங்கள் அனைத்தும் ஒரே புத்தகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த பருவத்திற்குரிய தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களும் இடம் பெற்றிருக்கும். முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஒரு புத்தகமும், 6,7,8 ஆகிய வகுப்புகளுக்கு இரண்டு புத்தகம் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.