வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் பலி

சாப்பிட்ட சிறுவன் பலியானதுயர சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பல்லாவரத்தில் வாழைப்பழம் சாப்பிட்ட மூன்றரை வயது சிறுவன் பலியான துயரசம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றுபவர் கிருஷ்ணகுமார். இவரது மகன் ஹரிஷ் சாய்நாதன்(3 1/2). இவன் தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி., படித்து வருகிறான். பள்ளியில் பகல் 11 மணிக்கு உணவு சாப்பிட்டு விட்டு, ஸ்நாக்ஸ் சாப்பிடுவது வழக்கம். அதே போன்று இன்று ஸ்நாக்ஸாக எடுத்து வந்த வாழைப்பழத்தை ஹரிஷ்க்கு, பள்ளி ஆயம்மா ஊட்டி விட்டுள்ளார். வாழைப்பழம் ஹரிஷின் தொண்டையில் அடைத்துகொண்டதால் விக்கல் எடுத்துள்ளது.

இதனையடுத்து ஆயம்மா,ஹரிசின் வாயினுள் கையை விட்டு வாழைப்பழத்தை எடுத்துள்ளார். உடனே ஹரிஷ் மயக்கமடைந்துள்ளான். உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஹரிசை பரிசோதித்த டாக்டர்கள், அவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஹரிஷின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.