“ராணா” -விற்கு முன் ரஜினி நடிக்கும் “கோச்சடையான்”

ரஜினிகாந்த் நடிக்கும் 3-D படம் `கோச்சடையான்’

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் கோச்சடையான். இது முப்பரிமாண (3D) படம். ராணாவிற்கு முன்  திரைக்கு வரவிருக்கும் படம். இது இந்தியாவில் தயாராகும் முதல் 3-D படம் என்பது பெருமைக்குரியது.

சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் டைரக்ஷன் மேற்பார்வை கே.எஸ்.ரவிக்குமார். இப்படம் ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தினர் தயாரிக்கின்றனர். ரஜினியின் மகள் சவுந்தர்யா அஸ்வின் இப்படத்தை இயக்குகிறார்.

ஆகஸ்ட் 2012-ல் திரைக்கு வரவிருக்கிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை துவங்க உள்ளது. அதன் பின்னர் ராணா படத்தில் நடிப்பார் என ஈராஸ் நிறுவனமும், சௌந்தர்யா அஸ்வினும் ரஜினி சார்பாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.