ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனில் வாகனம் நிறுத்துமிடம்

ராசிபுரம் ஜங்சன்
ராசிபுரம் ஜங்சன்

ராசிபுரம் புதிய ரயில்வே ஸ்டேஷனில் குளிரூட்டப்பட்ட குடிநீர் இயந்திரம், வாகனம் நிறுத்துமிடம் அமைக்க, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எம்.பி. ராமலிங்கம் அறிவித்துள்ளார்.

ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்கவும், குளிரூட்டப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கவும், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷன் வழித்தடத்தில், ஈரோடு வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்லும். புதிய ரயில் பாதை திட்டம் துவக்க விழாவின் போது, புதியதாக இரண்டு ரயில்கள் விட வேண்டும் என, ரயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

Image Cridit By:THEHINDU

Leave a Reply

Your email address will not be published.