நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கிளை நூலக கட்டிடம் கட்டும் பணி ரூ54 லட்சத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. பணி துவக்க விழா மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் தலைமையில் நடந்தது. சட்டப்பேரவை துணைத்தலைவர் தனபால் கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.
அவர் பேசும்போது, இந்த நூலக கட்டிடம் 3196 சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது. தரை தளத்தில் முன்புற வராண்டா, நூலக அறை, நூல்கள் இருப்பறை, படிப்பறை, பதிவறை, சிறுவர்கள், பெண்கள் படிப்பறை மற்றும் முதியவர்கள் படிக்கும் அறை ஆகியவை அமைகிறது. மேலும் குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கான கழிப்பிட வசதிகள் செய்யப்படவுள்ளது என்றார்.