மொபைல் கொள்ளை :மொபைல்க்கு “மிஸ்டு கால்’ கொடுத்தல் ரூபாய் 40 பறிபோகும்

வேலூர் மாவட்டத்தில், மொபைலில், “மிஸ்டு கால்’ கொடுத்து, லட்சக் கணக்கில் பணம் மோசடி செய்வது நடந்து வருகிறது. உலக அளவில் மொபைல் போன் பயன்படுத்துவதில், இந்தியா நான்காவது இடம் வகித்து வருகிறது .மொபைல்போன் மூலம் நடக்கும் மோசடிகளில், இந்தியாவில் தான் அதிகம் நடந்து வருகிறது .அதும்  கணிசமாக தமிழகத்தில் தான் இந்த கொள்ளை அதிகம் நடக்கிறது.

வேலூர் மாவட்டத்தில், ஒரு மாதமாக மொபைலில் மிகப்பெரிய அளவில் மோசடிசெய்வது நடந்து வருவது தெரிய வந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, ப்ளஸ் 960 என்ற எண்களில் துவங்கும், 10 இலக்கம் கொண்ட நம்பரில் இருந்து மிஸ்டு கால் வரும் அந்த  எ அந்த நம்பரை தொடர்பு கொண்டால், எதிர் முனையில் யாரும் பேசுவதில்லை. இணைப்பை துண்டிக்கும் போது, வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து, 40 ரூபாய் எடுக்கப்படுகிறது. பேலன்ஸை ஒரு சிலர் மட்டும் பார்ப்பதால், இது யாருக்கும் தெரியவில்லை. இந்த மோசடியை அறியாத வாடிக்கையாளர்கள் பலர், மிஸ்டு கால்களை தொடர்பு கொண்டு, தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். பொதுவாக இது ப்ரீ பெய்டு கணக்கில் மட்டுமே இப்படி நடக்கிறது.

இது குறித்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது : இதுபோன்ற மோசடிகள் சமீபகாலமாக நடந்து வருவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் தொடர்ந்து மெசேஜ் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம்.இது குறித்து போலீசார் கூறியது என்னவென்றால்  இந்த மோசடி மற்ற நிறுவன மொபைல் வாடிக்கையாகளர்களை விட, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்குதான் அதிக அளவில், “மிஸ்டு கால்கள்’ வருகிறது. சாதாரணமாக, 10 இலக்க எண்ணில் இருந்து வரும் எண்ணில் பேசினால், உள்ளுர் கட்டணம் தான் வரும். ஆனால், இந்த மிஸ்ட் கால் நம்பரை தொடர்பு கொண்டால், 40 ரூபாய் பிடிக்கப்படுவது எப்படி எனத் தெரியவில்லை. இது  குறித்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும். இது பற்றி அவர்களிடம் கேட்ட  போது அவர்கள் இந்த 40 ரூபாய்க்கான விளக்கம் தரவில்லை என்றார் .

Leave a Reply

Your email address will not be published.