மூடப்படும் நிலையில் உழவன் உணவகம்

நாமக்கல்லில் உள்ள உழவன் உணவகம் மூடப்படும் நிலையில் உள்ளதாக  சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் உழவர் சந்தை வளாகத்தில் கிராமப்புற உணவு வகைகளுக்காக  இரவு நேரங்களில்  உழவன் உணவகம் தொடங்கப்பட்டது,  உணவகத்தை அப்போது  நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் இந்த புதிய திட்டத்தை தொடங்கிவைத்தார்.

கிராமங்களில் புகழ்   பெற்ற அதிரசம், புட்டு, பால் பனியாரம், ஆட்டுக்கால் சூப் போன்ற வித விதமான உணவு வகைகள் இந்த உணவகத்தில் வழங்கப்பட்டது. மக்கள் அதை விரும்பி சாப்பிட்டனர்.
ஆனால், ஆட்சியர் சகாயம் நாமக்கல்லில் இருந்து மாற்றப்பட்ட  பின், உழவன் உணவகம் மூடப்படும் நிலைக்கு வந்துள்ளது.

சூப் வகைகளுக்கு 3 கடைகளும், இட்லி, தோசை, பணியார கடைகள் மட்டுமே தற்போது உள்ளன.

இதுபற்றி  தற்போது உழவன் உணவகத்தில் கடை நடத்தி வரும் விவசாயிகள் கூறியதாவது:
காலையில் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்து விட்டு மாலையில் மீண்டும் உழவன் உணவகத்துக்கு வருவதில் சிரமம் ஏற்படுகிறது. அதிகாரிகள் தரப்பிலும் முன்பு போல ஒத்துழைப்பு இல்லை. இதனால், விவசாயிகளும் தங்கள் வருகையை குறைத்துக் கொண்டனர்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.