மின்வெட்டைக் கண்டித்து திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம்

மின்வெட்டு
மின்வெட்டு

மின்வெட்டுக்கு கண்டனம் தெரிவித்து, திருச்செங்கோட்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அண்ணா சிலையருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் கே.சி. பழனிசாமி, அமைப்புச் செயலர் என்.பழனியப்பன், மாவட்ட இளைஞர் அணி செயலர் சங்கர், மாவட்ட மகளிரணி செயலர் சுதா நடராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published.