மின்சிக்கன விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்லில் மின்சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் பேரணி தொடங்கியது. பேரணியை நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சச்சிதானந்தம் தொடங்கிவைத்தார். இந்த பேரணியில் மின்சாரத்துறை உழியர்கள் அனைவரும் பங்கேற்றனர். நாமக்கல் ட்ரினிட்டி மகளிர் கல்லூரி மற்றும் கிங் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ – மாணவிகள் பங்கேற்று மின்சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். நகரின் முக்கிய வீதிகளில் சென்ற பேரணி இறுதியில் செயற்பொறியாளர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published.