மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அழைப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையுடன் வரவேண்டும். 8ம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ, மாணவியர் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அட்டை பெற்றிருக்க வேண்டும்.
வேறு எந்த துறையிலும் உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் மாத இறுதிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
எனவே, அந்த வாய்ப்பினை மாணவ, மாணவியர் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.