பொங்கல் பரிசு வழங்குகின்றது தே.மு.தி.க

பொங்கல் பரிசு வழங்குகின்றது தே.மு.தி.க
பொங்கல் பரிசு வழங்குகின்றது தே.மு.தி.க

“ஏழை, எளிய மக்கள் பொங்கல் கொண்டாடும் வகையில், தே.மு.தி.க., சார்பில் அரிசி, முந்திரி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும்,” என, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

சமூக நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், தே.மு.தி.க., சார்பில் எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுவது வழக்கம். மக்களிடையே பிளவு மனப்பான்மை மறைந்து, ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டு வாழும் உணர்வை ஏற்படுத்தவே, இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

பணக்காரர்களுக்கு விழா எடுப்பதும், பண்டிகை கொண்டாடுவதும் எளிதாகும். ஆனால், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், போதுமான வருமானம் இல்லாதவர்களுக்கு, பண்டிகை வந்தால் ஒருபுறம் மகிழ்ச்சியும், மறுபுறம் செலவிற்கு எங்கே போவது என்ற வருத்தமும் ஏற்படுகிறது. இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்களுக்கே என்பதை பறைசாற்றும் வகையில், தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், வரும் 13ம் தேதி, பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவில், ஏழை, எளிய மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், கரும்பு, மஞ்சள் ஆகியவை வழங்கப்படவுள்ளன. என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.