பைக் மோதி தொழிலாளி பலி

பரமத்திவேலூர் ஊஞ்சப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு (55). அதே பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (50). இருவரும் கூலித் தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் பைக்கில் பரமத்தி வேலூருக்கு சென்றனர். பின்னர் மீண்டும் ஊஞ்சப்பாளையத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காமாட்சி நகர் பகுதியில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த துரைசாமி மற்றொரு பைக்கில் வந்த அருணாகிரி (61) ஆகியோர் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.