பேருந்து நிலையம் மாற்றமில்லை – முதல்வருக்கு நன்றி

நாமக்கல் பேருந்து நிலையம்
நாமக்கல் பேருந்து நிலையம்

பேருந்து நிலையம் இடமாற்றம் குறித்த உத்தரவுக்கு, தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு, நாமக்கல் மாவட்ட சர்வகட்சி குழு சார்பில், அதன் தலைவர் வாசுசீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் : நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, மாவட்ட சர்வகட்சிக் குழு சார்பில், ஆர்ப்பாட்டம நடத்தப்பட்டது. அந்த ஆர்பாட்டத்தில், வட்ட அனைத்து வணிகர்கள் சங்கம், தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில்,பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது. அதையடுத்து, முதலைப்பட்டிக்கு பேருந்து நிலையம் இடமாற்றம் வேண்டாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு, தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.