பெட்ரோல் விலை 2012 ஆங்கில புத்தாண்டு முதல் ரூ.2.25 உயர்கிறது

பெட்ரோல் விலை ஆங்கில புத்தாண்டு  முதல் ரூ.2.25 உயர்கிறது.
கச்சா எண்ணெய் விலை குறைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் முதல் முறையாக பெட்ரோல் விலை 2 முறை குறைக்கப்பட்டது. அதன் பின்  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததால் மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டன.

இதனால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.25 உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. ஜனவரி 1 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடப்பதால் விலை உயர்வு 2 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படலாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.