பெட்ரோல் விலை லிட்டருக்கு நாளை 65 காசு அதிகரிக்கப்படலாம்

இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதையடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசு வரை நாளை உயர்த்தப்படலாம் என, எண்ணெய் நிறுவன அதிகாரியொருவர் அறிவித்துள்ளார் . இருந்தாலும் இது , அரசு ஒப்புதல்
கொடுத்த பின்னரே இது சாத்தியமாகும் என தெரிவித்துள்ளார்.

இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால், எண்ணெய், மற்றும் சமையல் எரிவாயு இறக்குமதி செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே அதற்கேற்ற வகையில், உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் விலைகள் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.குறித் இதுபற்றி  பொதுத் துறை எண்ணெய் நிறுவன அதிகாரியொருவர்  சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், கடந்த ஒரு மாதத்தில் இரு முறை, பெட்ரோல் விலையை குறைத்தன என்று கூறியுள்ளார்.

தற்போதைய சர்வதேச விலை நிலவரங்களை ஒப்பிடுகையில், இழப்பை சரிக்செய்ய வேண்டும் என்பதற்காக  பெட்ரோல் விலையை லிட்டருக்கு 0.65 பைசா முதல் 0.66 பைசா வரை உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தும் போது, உள்ளூர் விற்பனை வரியையும் சேர்த்தால், அனேகமாக டில்லியில் 0.65 பைசா முதல் 0.66 பைசா வரை பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம். அனேகமாக, நாளை 16ம் தேதி  பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம். பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டுமானால், அதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்துடன் கலந்து பேசி, அனுமதி பெற வேண்டும். தற்போது லோக்சபா கூட்டம் நடந்து வரும் நிலையில், பெட்ரோல் விலையை உயர்த்தினால், மத்திய அரசை எதிர்க்கட்சிகள் சும்மா விடாது, போராட்டத்திலும் இறங்க வாய்ப்பு உண்டு .அதனால், அரசு ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே, பெட்ரோல் விலை உயரலாம் என்று அதிகாரி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.