புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்

தமிழக முதல்வர்
தமிழக முதல்வர்

கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்குப் பதிலாக, புதிய காப்பீட்டுத் திட்டம் தமிழக அரசின் மூலம் துவக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனமான, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் காப்பீடு நிறுவனம் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டத்தின்படி, ஒரு குடும்பத்துக்கு, ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு நான்கு லட்ச ரூபாய் அளவுக்கு மருத்துவ சிகிச்சை செய்து கொள்வதற்கான தொகையை, இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும்

“முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்”  குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு மட்டும், ஆண்டுக்கு 1.50 லட்ச ரூபாய் வரை வழங்கப்படும். ஏற்கனவே இருந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இடம்பெற்றிருந்த, 1.34 கோடி குடும்பங்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படும்.இருந்தபோதிலும், பயனாளிகளுக்கு புதிய மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்படும்.இத்திட்டத்தை, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், தலைமைச் செயலகத்தில்  துவக்கி வைத்தார். விரைவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை பட்டியல் வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published.