பிளஸ் 2 மாணவர்களுக்கு பிராக்டிக்கல் தேர்வு பிப்ரவரி – 2

பிளஸ் 2 மாணவர்களுக்கு பிராக்டிக்கல்,பேசுதல், கேட்டல் தேர்வினை பிப்ரவரி  2 முதல் 21ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு மார்ச் 8ல் துவங்கி, 30ல் முடிவடைகிறது. முன்னதாக, அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கு பிராக்டிக்கல் மற்றும் அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும் பேசுதல், கேட்டல் திறன் தேர்வினை நடத்த தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.இத்தேர்வினை பள்ளியில் படித்து நேரடியாக தேர்வெழுதும் மாணவர்களுக்கு பிப்ரவரி 2 முதல் 21க்குள் நடத்தி முடிக்க வேண்டும். தனியார் தேர்வர்களுக்கு பிப்ரவரி 20 முதல் 22க்குள் நடத்தி முடிக்கவேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் பிராக்டிக்கல் தேர்வினை நடத்தி, உரிய தகவலை தெரிவிக்கவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.