
அதிகளவில் புத்தாண்டு வாழ்த்துக்கள் வந்ததினால் ட்விட்டர் சேவை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கி விட்டது. ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலமாக நேற்று முன்தினம் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில் பிரிட்டனில் நேற்று முன்தினம் மதிய நேரத்தில் ட்விட்டர் முடங்கி விட்டது.
நிமிடத்துக்கு 16 ஆயிரத்து 197 வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால் ட்விட்டர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கி விட்டது. இதன் காரணமாக பயனாளிகள் கடும் எரிச்சல் அடைந்தனர்.
ட்விட்டர் அனுப்பிய செய்திகளில், ட்விட்டர் ஈஸ் ஓவர் கெபாசிட்டி என்ற மூன்று வார்த்தைகள் எனது இன்றைய நாளை வீணாக்கிவிட்டன என்றும், இந்த புத்தாண்டில் ட்விட்டர் எடுக்க வேண்டிய உறுதிமொழி என்னவென்றால் இனி நான் எப்போதும் ஓவர் கெபாசிட்டி என்ற நிலைக்குப் போக மாட்டேன் என்பது தான் எனவும் கிண்டல் செய்துள்ளனர்.