பிச்சைகாரர் நிலம் வங்க வைத்திருந்த பணம் ரூ.6.23 லட்சம்

தஞ்சையில் திருட்டு தொடர்பாக பிச்சைக்காரர்களிடம்  சோதனை நடத்திய போது அதில் ஒருத்தரிடம்  சிக்கிய, 6.23 லட்சம் ரூபாய்க்கு இது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலை இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சமது, வயது 55. இவரது மனைவி நூர்ஜகான், வயது 45. இந்த தம்பதிகள் இருவரும் பிச்சை எடுப்பதே இவர்களின் தொழில்.இவர்கள்  இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் பிச்சை எடுப்பதில்லை வெவ்வேறு இடங்களில் சீசனுக்கு தகுந்தாற்போல் திருச்சி, சென்னை, ஏர்வாடி, மற்றும் நாகூர் ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் , விழாக்கள் நடக்கும் இடங்களிலும் பிச்சை எடுப்பதே இவர்கள்  வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்கள் தஞ்சை ஆற்றுப்பாலம் ஜூம்மா மசூதியில், சில மாதங்கள்  தங்கி பிச்சை எடுத்து வந்திருகிரார்கள் .அப்போது  கடந்த 2ம் தேதி, கீழவாசலைச் சேர்ந்த மன்சூர் என்பவர், தொழுகைக்கு வந்துள்ள போது  அவருடைய மொபைல் போன் தொலைந்ததும் போலீசில் புகார் செய்துள்ளார் . உடனே, பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் மன்சூர் சேர்ந்து, சந்தேகத்தின் பேரில் மசூதி வாசலில் இருந்த பிச்சைக்காரர்களை சோதனையிட்டனர். அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அப்துல் சமது பையை எடுத்து சோதனையிட்ட போது, அவரது பையிலிருந்து கட்டு கட்டாக லட்சக்கணக்கில் பணம் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளிவாசல் நிர்வாகிகள், சமதையும், அவரது பணத்தையும் தஞ்சை மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர்.

எஸ்.ஐ., சுதா மற்றும் போலீசார், அப்துல் சமதுவிடம் விசாரித்தபோது அப்துல் சமது கூறியதாவது: கடந்த ஆண்டு 2003ல், சென்னை அடுத்த தாம்பரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒரு தொகையை நான் டெபாசிட் செய்திருந்தேன். அதேபோல், சில வங்கிகளில் பணத்தை பிரித்து டெபாசிட் செய்து வைத்திருந்தேன். பிச்சை எடுப்பது மிகவும்  எளிதாக இருந்தாலும்,நாங்கள் இரவில் தங்குவது மிகவும் சிரமமாக இருந்தது வந்தது. அதனால் வங்கிகளில் உள்ள  பணத்தை எடுத்து, தஞ்சையில் இடம் வாங்கி அங்கே செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் இங்கு வந்து  ஒரு மாதமாக இடம்
தேடியும்,எங்கேயும்  சரியான இடம் அமையயாத காரணத்தால், பணத்தை நானே வைத்து அலைந்து வருகிறேன். இவ்வாறு அப்துல் சமது கூறினார். மேலும், அவர் வைத்திருந்த, 6 லட்சத்து, 23 ஆயிரத்து, 930 ரூபாய்க்கு உரிய வங்கி ரசீதுகளை போலீசாரிடம் காட்டியதும், அவரை, “பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி வியப்புடன் அவரை வழி அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.