பாபர் மசூதி இடிப்பு தினம் இரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பு

டிசம்பர் மாதம் – 6 பாபர் மசூதி இடிப்பு தினம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும், ரெயில்களில் பார்சல்கள் அனுப்ப 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.டிசம்பர் மாதம் 6-ந் தேதி பாபர் மசூதி தினமாக அனுசரிக்கப்படுகிறது.தமிழ்நாட்டில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டும் ரெயில்வே  போலீசார் தங்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும்படியான  நபர், பொருட்களை தீவிர சோதனைக்கு உட்படுதப்படுகிறார்கள். அனைத்து நுழைவாய்களும் அடைக்கப்பட்டு முக்கிய நுழைவாயில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.