நெருங்குகிறது “தானே” புயல் தமிழகத்தில் இன்று இரவு முதல் மழை பெய்ய வாய்ப்பு

தானே புயல் பற்றி எஸ்.ஆர் .ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கை :

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி சென்னையில் இருந்து கிழக்கு,தென்கிழக்கில் 700 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. அந்த புயலுக்கு “தானே” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இப்புயல்   30 -ம் தேதி கரையை கடக்கும்.

தானே புயல் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து 30 -ம் தேதி காலை வடதமிழகத்திற்க்கும், தெற்கு ஆந்திராவுக்கும் இடையே கரையை கடக்கும்.
தானே புயல் காரணமாக 28 -ம் தேதி (இன்று) இரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை பெய்யதொடங்கும். குறிப்பாக தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

புயல் காரணமாக கடல் கொந்தளிப்பாக இருக்கும். எனவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

என ரமணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.