நாளை நாமக்கல்லில் மின்தடை

Power-Cutநாமக்கல் துணை மின் நிலையத்தில் நாளை (21ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என்று உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் :

நாமக்கல் துணை மின் நிலையத்தில், நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை, நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபாளையம், வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முத்துக்காப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, கீரம்பூர் ஆகிய இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.