நாமக்கல் நகரினுள் விபத்து அபாயம்

பேரி கார்டு  நாமக்கல் மணி கூண்டு அருகே, சாலை நடுவே இருந்த தடுப்பு அகற்றப்பட்டதால், விபத்து ஏற்ப்படும் அபாயம் நிலவி வருகிறது.

நாமக்கல்லில் போக்குவரத்தில் மாற்றங்கள் பல செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன், வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தன்படி திருச்சி, மோகனூரில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் கோட்டை சாலையை சுற்றி வரும்படி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
அதனால், வாகன நெரிசல் தவிர்க்கப்பட்டதுடன், விபத்தும் குறைந்தது. ஆனால் மலையை சுற்றி வருவதால் கால தாமதம் எற்படுவதாக ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் தற்போது, மணி கூண்டு அருகே சாலையின் நடுவே இருந்த பேரி கார்டு, கடந்த சில தினங்களுக்கு முன், அகற்றப்பட்டது. அதனால், அப்பகுதியில் சாலை விரிவடைந்துள்ளது.
அதை பயன்படுத்தி வாகனங்கள் அப்பகுதியில் சகட்டு மேனிக்கு அதி வேகத்தில் வளைந்து செல்கிறது. அவ்வப்போது, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. யார் எந்த பகுதியில் இருந்து வருகின்றனர் என்பதே தெரிவதில்லை. நாமக்கல் நகரில் நிலவும் விபத்து அபாய பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண பழையபடி சாலையின் நடுவே தடுப்பு அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.