நாமக்கல்லில் 11 ம் தேதி மின்தடை

நாமக்கல் துணைமின்நிலையத்தில் 9 ம் தேதி மின்சார பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை காரணத்தால் 9 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடை, வரும் 11 ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையொட்டி  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பந்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முத்துக்காப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, கீரம்பூர் ஆகிய ஊர்களில் மின்சார வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.