திரையரங்கில் வசூலி்க்கப்படும் டிக்கெட்டுகளுக்கு சேவை வரி மூன்று மடங்கு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த 19ம் தேதி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி உதவியுடன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். இந்த முயற்சி வீணானதால், திரையரங்குகளை ஒருநாள் மூடும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 23.02.2012 அன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தென்னிந்திய திரைப்பட சங்கத் தலைவர் சரத்குமாரும் தெரிவித்துள்ளார். திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட அனைவரும், நாளை நடைபெறும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.