திருச்செங்கோட்டில் உலக காப்பிய தமிழ் ஆய்வு மாநாடு 21ம் தேதி நடக்கிறது

 

உலக காப்பிய தமிழ் ஆய்வு 10வது மாநாடு திருச்செங்கோட்டில் வரும் 21ம் தேதி நடக்கவுள்ளது.
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை கல்லூரியில் வரும் 21ம் தேதி அனைத்து உலக காப்பியத்தமிழ் 10வது ஆய்வு மாநாடு நடக்கிறது. கே.எஸ்.ஆர். கல்லூரி, திருவையாறு தமிழ் ஐயா கல்வி கழகம் சார்பில் இந்த ஆய்வு மாநாடு நடக்கிறது. 21ம் தேதி காலை 9 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ரங்கசாமி தலைமை வகிக்கிறார். தமிழ்த்துறை தலைவர் கார்த்திகேயன் வரவேற்கிறார். தருமபுர ஆதீனம் குமாரசாமி தம்பிரான் குத்துவிளக்கு ஏற்றுகிறார்.
மாநாட்டு இயக்குனர் கலை வேந்தன் மாநாட்டின் நோக்கம் பற்றி விளக்குகிறார். திருமலை சமுத்திரம் தொழிலதிபர் கோவிந்தராசன் ஓவியக் கண்காட்சியை துவக்கி வைக்கிறார். சென் னை தமிழக எழுத்தாளர் சங்க பொதுச்செயலர் வாசுகி கண்ணப்பன் புத்தக கணகாட் சியை துவக்கி வைக்கி றார். பெரியார்  பல்கலை கழக துணைவேந்தர் முத்துச்செழியன் நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். பாரதியார் பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் இளங்கோ, கல்லூரி செயல் இயக்குநர் கவிதா சீனிவா சன், முதல்வர் கண்ணன், தாயம்மாள் அறவாணன், அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி பொறுப் பாளர் சண்முகையா, ஆனை வாரி ஆனந்தன் உள்ளிட்ட பலர் பேசுகின்றனர்.
மாநாட்டு பொதுச்செயலாளர் டாக்டர் சரஸ்வதி ராமநாதன் கருத்தங்கை துவக்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து காட்சி வழிக் கருதரங்கம், இசை அரங்கம், நடன அரங்கம், தீர்மானம் நிறைவேற்று அரங்கம் ஆகியவை நடக்கின்றன. நிறைவாக விருது வழங்கும் விழாவிற்கு தமிழ் ஐயா கல்வி கழக தலைவர் நரேந்திரன் தலைமை வகிக்கிறார். சிலம்பொலி செல்லப்பன், முத்தமிழ் முகிலன், தமிழ்சேரனார், துரைமாலிறையன், முகமது தாகா ஆகியோர் விருது பெருகின்றனர். சிறந்த கல்லூரிக்கான விருதை திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியும், மதுரை பாத்திமா கல்லூரியும் பெறுகின்றன. சிறந்த தமிழ் சங்க விருதை போர்ட் பிளேர் அந்தமான் தமிழர் சங்கம் பெறுகிறது. சிறந்த நூலாசிரியருக்கான விருதை ஐயப்பன் பெறுகிறார். விருதுகளை தஞ்சாவூர் தமிழ் பல்கலை கழக துணைவேந்தர் திருமலை   வழங்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published.