திருச்செங்கோடு பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை

திருச்செங்கோடு நகராட்சி எல்லையில் சுற்றுப்புற சூழலை  மாசு படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை  மற்றும் பயன்பாட்டிற்கு நகராட்சி  அதிரடியாக தடை விதித்துள்ளது.

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து நகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

திருச்செங்கோடு நகராட்சி எல்லைக்குள்  40 மைக்ரானுக்குக் கீழ் உளள  பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு, பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்படுகிறது. வெள்ளை மற்றும் தரச்சான்றில் குறிப்பிட்டுள்ள கலர்  அல்லாத பிளாஸ்டிக் மட்டுமே உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.  எந்த கடைக்காரரும் இலவசமாக பிளாஸ்டிக் பைகளை அல்லது பொருளை வாடிக்கையாளருக்கு தரக்கூடாது. பிளாஸ்டிக் தூக்குப்பை , உணவு பொருளை கட்டும்  மற்றும் பேக்கிங் செய்யப்பட உதவும் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

பான் மசாலா, புகையிலை, குட்கா, தண்ணீர் குடிக்க பயன்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், பயன்படுத்தியவுடன் தூக்கியெறியும் டம்ளர்கள்  முழுவதுமாக தடை செய்யப்படுகிறது. மக்கள் பயன்பாட்டுக்குரிய பொருட்களை பிளாஸ்டிக் சாசேக்களில் தரப்படுவதும் தடை செய்யப்படுகிறது. இம்மாதிரியான பொருட்களை வெளியிலிருந்து நகராட்சி எல்லைக்குள் கொண்டு வருவதும் தடை செய்யப்படுகிறது. இந்த தடையை மீறி செயல்படும் சில்லறை விற்பனையாளர்களுக்கு முதல் முறை ரூ.250 ம், இரண்டாம் முறை ரூ.500 ம், மூன்றாவது முறை ரூ.1000 மும் அபராதம் விதிக்கப்படும்.இதேபோல் பிளாஸ்டிக் பொருட்களை மொத்த விற்பனை செய்பவர்களுக்கு முதல் முறை ரூ.500ம்,இரண்டாம் முறை ரூ.1000 மும், மூன்றாம் முறை ரூ.2000 மும் அபராதம் விதிக்கப்படும்.பார்சல் செய்ய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு முதல் முறை ரூ.500ம், இரண்டாம் முறை ரூ.1000 மும், மூன்றாம் முறை ரூ.2000 மும் அபராதம் விதிக்கப்படும்.வெளியிடங்களிலில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருபவர்களுக்கு முதல் முறை ரூ.100ம்,இரண்டாம் முறை ரூ.2000 மும், மூன்றாம் முறை ரூ.4000 மும் அபராதம் விதிக்கப்படும்.பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் முதல் முறை ரூ.500ம்,இரண்டாம் முறை ரூ.1000 மும், மூன்றாம் முறை ரூ.2000 மும் அபராதம் விதிக்கப்படும்.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தால் முதல் முறை ரூ.200ம்,இரண்டாம் முறை ரூ.5000 மும், மூன்றாம் முறை ரூ.10,000 மும் அபராதம் விதிக்கப்படும்.நான் காவது முறையும் தொடர்ந்து அதே தவறினை செய்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் செயல்படுவது தடை செய்து சீல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.