தினமும் 3 கப் டீ குடித்தால் மாரடைப்பு வருவதை தவிர்க்கலாம்

அடிக்கடி டீ குடிப்பது நல்லதல்ல என சிலர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால், தினமும் 3 கப் பிளாக் டீ குடித்தால் மாரடைப்பு, சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதன் விவரம் :

பிளாக் டீ குடிக்காதவர்களைவிட குடித்தவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது ஆய்வில் தெரிகிறது. அதாவது, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், ரத்தக் குழாய் சுருங்கி ரத்த ஓட்டம் தடைபடுவதை தவிர்க்கவும் பிளாக் டீ உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த 3 விதமான பாதிப்புகள் காரணமாக இதயத்துக்கு ஆக்சிஜன் செல்வது தடைபட்டு மாரடைப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. இதுதவிர 2ம் நிலை சர்க்கரை நோய் ஏற்படுவதையும் டீ தடுப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். தினமும் டீ குடிக்காதவர்களைவிட 3 முதல் 6 கப் வரை டீ குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 30 முதல் 57 சதவீதம் வரை குறையும். டீயில் உள்ள ஒருவித நோய் எதிர்ப்பு பொருளே இதற்குக் காரணம் என ருக்ஸ்டன், மேசன் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.