தன்னிறைவு திட்டத்தின் கீழ் நாமக்கல்லில் புதிய பூங்கா

நாமக்கல்லில் தினசரி காய்கறி சந்தை உள்ள இடத்தில் 75 இலட்சம் செலவில் பொழுது போக்கு பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகின்றது. முதற்கட்டமாக அங்கு உள்ள பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. பொங்கலுக்கு முன்பு தினசரி காய்கறி சந்தை வார சந்தைக்கு இடம்மாற்றம் செய்யப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்லில் பொழுது போக்கிற்கு என எந்த ஒருவசதியும் இல்லை. நடைபயிற்சி மேற்கொள்ளவும் போதிய வாசதி இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மக்களின் பொழுதுபோக்கு அவசியத்தை உணர்ந்து 75 இலட்சம் செலவில் பொழுது போக்கு பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.