ஜூலை 20ல் வேலைவாய்ப்பு முகாம்

முத்தாயம்மாள் இன்ஜி., கல்லூரியில் ஜூலை 20ல் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை தென்மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி வாரியமும், ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியும் இணைந்து, ஜூலை 20 மற்றும் 27 தேதிகளில், மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளது.
ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இம் முகாமில், 2010 முதல் 2012ம் ஆண்டுகளில் டிப்ளமோ, ப்ளஸ் 2 கல்வியில் தொழிற்பிரிவு படித்தவர்களுக்கும், இன்ஜினியரிங் பட்டம் பெற்ற பட்டதாரிகளும் பங்கேற்கலாம். ஜூலை 20ம் தேதி, டிப்ளமோ முடித்தவர்களும், ப்ளஸ் 2 தொழிற் பயிற்சி முடித்தவர்களும் பங்கேற்கலாம்.
ஜூலை 27ம் தேதி, இன்ஜினியரிங் கல்வி முடித்தவர்கள் பங்கேற்கலாம். இதில், இந்தியாவின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, மாணவர்களை தேர்வு செய்யும் என, கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சென்னை தரமணி வேலைவாய்ப்புப் பயிற்சி வாரியத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறாதவர்கள் மட்டும் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர், கல்லூரிக்குச் செல்ல, ராசிபுரத்திலிருந்து கல்லூரி நிர்வாகம் சார்பில், இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, 2010, 2011 மற்றும் 2012ல் டிப்ளமோ, ப்ளஸ் 2 வில் தொழிற்பிரிவு, இன்ஜினியரிங் பட்டம் முடித்த, மாணவ, மாணவியர், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்மண்டல வேலைவாய்ப்பு மற்றும் கல்லூரி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.