சாலை விபத்துக்களை குறைக்க இளைஞர்கள் முன் வர வேண்டும்

நாமக்கல் ஆட்சியர்
நாமக்கல் ஆட்சியர்

சாலை விபத்துக்களை குறைக்க இளைஞர்கள் முன் வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் கூறியுள்ளார். திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவியருக்கான வினாடி-வினா போட்டி நேற்று நடைபெற்றது.

பரிசு வழங்கும் விழா விற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகௌரி தலைமை வகித்தார். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கண்ணையன் முன்னிலை வகித்தார். விழாவில் ஆட்சி யர் குமரகுருபரன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது :

உலக அளவில் நடை பெறும் சாலை விபத்துக்களில் இந்தியா இரண் டாம் இடமும், இந்திய அளவில்  தமிழகம் முதலிடத்தையும் பிடித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள் ளது. இன்று நடைபெறும் சாலை  விபத்துகளில் இளைய தலைமுறையினரே அதிகம் உயிரிழக்கின்றனர். இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களை நம்பித்தான் உள்ளது. ஆக வே இளைஞர்கள் சாலை விபத்துக்களைக் குறைக்க முன்வர வேண்டும். அதற்காகத்தான் ஆண்டு தோறும் சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் குமரகுருபரன் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.