கேரள அரசு பிடிவாதம் – புதியஅணை கட்ட பிரதமரை சந்திக்க முடிவு

“தமிழக-கேரள மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி, முல்லை பெரியாறு அணை பிரச்னையை சுமுகமாக தீர்க்கவே விரும்புகிறோம்’ என கேரள முதல்வர் உம்மன் சாண்டி நேற்று தெரிவித்துள்ளார் .இருந்தாலும் அனைத்துக் கட்சியினருடன்
டில்லியில் பிரதமரை சந்தித்து, புதிய அணை கட்டப்படவேண்டும், இல்லையெனில் அணையின் நீர்மட்டத்தை குறைக்கவேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் , கேரளா அரசு  தனது பிடிவாதப் போக்கை கைவிட மறுத்து வருகிறது .

நாங்கள் உயர்ந்த நோக்கத்திற்காக அனைவரும் இணைந்து பாடுபடுகிறோம் நிச்சயம் வெற்றியும் பெறுவோம். அணை உடைந்தால் இடுக்கி அணையில் நீரை தேக்கி வைக்க முடியும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருப்பதும் , முல்லை பெரியாறு அணை சேதமடைந்துள்ளதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதையும்  காட்டுகிறது. கேரள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் விரைவில் டில்லி சென்று பிரதமரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம் விரைவில் அதற்காக  பிரதமரை சந்திப்பதற்கான தேதி கிடைத்ததும், முடிவு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார் .

கேரளா மனுத்தாக்கல் முல்லை பெரியாறு அணை தொடர்பாக, நேற்று கேரள அரசு சார்பில், அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்கவேண்டும் என மனுதாக்கல் வைக்கப்படுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.