குரூப் 2 தேர்வு ரத்து : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

தமிழகத்தில் நேற்று(12.08.2012)  நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி தேர்வாணைய தலைவர் நட்ராஜ் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை, 6.4 லட்சம் பேர் எழுதினர். தேர்வுதாள் ஈரோடு மாவட்டத்தில் வெளியானது குறித்து, டி.என்.பி.எஸ்.சி. அவசரமாக கூடி விவாதித்தது . இதில் தேர்வாணைய உறுப்பினர்களுடன் நட்ராஜ் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பின் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார்.

ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வை மீண்டும் நடத்துவது குறித்து 10 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று நட்ராஜ் கூறியுள்ளார். ஆணைய உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, புதிய தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் நட்ராஜ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.